மாடல் அழகியின் மடியில் விழுந்து கிடந்த போதைப் பொருள் கடத்தல் கும்பல்..!! மாஸ் என்ட்ரி கொடுத்த போலீஸ்..!! நடந்தது என்ன..?
கொச்சி அருகே சொகுசு லாட்ஜில் தங்கியிருந்த கேரள மாடல் அழகி உள்பட 6 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
போதை பொருள் கடத்தல் கும்பல்களை குறிவைத்து தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். போதை பொருள் கடத்தி சிக்குவோரை போலீசார் கைது செய்வதுடன், அவர்களின் நெட்வொர்க்கில் உள்ளவர்களையும் குறிவைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில், கேரள மாநிலம் கொச்சி அருகே கருகப்பள்ளி பகுதியில் உள்ள வெள்ளை மாளிகை என்ற லாட்ஜில், போதைப்பொருள் கடத்தல் கும்பல் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில், விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட கொக்கைன், மெத் மற்றும் கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது அந்த அறையில் வரபுழாவை சேர்ந்த மாடல் அழகியான அல்கா போனி (22), இடுக்கியை சேர்ந்த ஆஷிக் அன்சாரி (22), எம்.சி.சூரஜ் (26), பாலக்காட்டை சேர்ந்த ரஞ்சித் (24), முகமது அசார் (18), திருச்சூரை சேர்ந்த ஐ.ஜி அதுல் (18) ஆகிய 6 பேர் தங்கியிருந்தனர். அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கருகப்பள்ளியில் குறிப்பிட்ட தனியார் சொகுசு லாட்ஜில் ஆஷிக் பெயரில் அறை எடுக்கப்பட்டது.
கடந்த 13ஆம் தேதி முதல் அந்த லாட்ஜில் அந்த குழுவினர் தங்கியிருந்துள்ளனர். எலமகரா போலீசார் சோதனைக்காக லாட்ஜுக்கு வந்தபோது அவர்கள் அனைவரும் போதையில் இருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரின் கையில் சிரிஞ்ச்களைப் பயன்படுத்தி போதை ஊசி போடும் படங்கள் இருந்தன. மேலும், அவர்களிடம் இருந்து போதைப்பொருள் வியாபாரிகளின் விவரங்களையும் கண்டுபிடித்தனர். கைதான 6 பேரில் சூரஜ், ரஞ்சித் இருவரும் இதற்கு முன் போதைப் பொருள் வழக்குகளில் சிக்கியுள்ளனர்.
பெங்களூரை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் போதைப்பொருள் கும்பலின் முக்கிய இணைப்பாக கைதான 6 பேரில் போஸ் மற்றும் இக்கா ஆகியோர் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் இருந்து போதைப்பொருள் வியாபாரிகள் குறித்த தகவல்களும் கிடைத்திருக்கிறது. தினமும் குறைந்தது ரூ.15,000 மதிப்புள்ள போதைப் பொருட்களை இந்தக் கும்பல் விநியோகித்து வந்தது என்று போலீசார் தெரிவித்தனர். போதை பொருட்களை பெங்களூருவில் இருந்து கொண்டு வந்து கேரளாவில் விற்பனை செய்ததில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு என்பதை விசாரித்து வரும் போலீசார், அவர்களது செல்போன் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்த போதை பொருட்கள் வியாபாரிகள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து, அதன் அடிப்படையில் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Read More : வீடுகளில் இனி தெரியாமல் கூட இதை வளர்க்காதீங்க..!! சிக்கினால் ஜெயில் தான்..!! ஆனால் ஒரு கண்டிஷன்..!!