முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னையை உலுக்கிய இரட்டை கொலை!. சகோதரர்களை ஓட ஓட விரட்டி கொலை செய்த கும்பல்!. போலீசார் தீவிர விசாரணை!

The double murder that shook Chennai!. The gang that chased the brothers and killed them!. The police are investigating intensively!
07:02 AM Jan 19, 2025 IST | Kokila
Advertisement

Double murder: ஆவடி அருகே சகோதரர்கள் இருவரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்து விட்டு மர்மகும்பல் தப்பியோடிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisement

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது என தமிழக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. பள்ளி செல்லும் சிறுமிகள் தொடங்கி, இளம் பெண்கள், மூதாட்டி வரை திருட்டு வழிப்பறி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களில் மட்டும் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டி படுகொலை, காதலிக்க மறுத்த பெண் மீது தாக்குதல் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சென்னை காசிமேடு திடீர் நகரில் ரவுடி லோகநாதன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை என அடுத்தடுத்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, தலைநகர் சென்னையில் கொலை, கொள்ளை சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகின்றன.

இந்தநிலையில், ஆவடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளிகளான ஸ்டாலின், ரெட்டமலை சீனிவாசன் ஆகியோரை 3 பேர் கொண்ட கும்பல் துரத்திச் சென்று வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Readmore: ‘பாகிஸ்தான் பயங்கரவாதம் ஒரு புற்றுநோய்’; அது தன்னைத்தானே தின்று கொண்டிருக்கிறது!. ஜெய்சங்கர் கடும் தாக்கு!

Tags :
brothers killedChennaidouble murderPolice
Advertisement
Next Article