முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தின் இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..!! நடந்தது என்ன..? நண்பரின் பதிவால் அதிர்ச்சி..!!

Ravi Shankar, the writer of the song 'Rosapoo Chinna Rosoapoo' featured in the film Suriyavamsam and the director of the film 'Varushamellam Vasantham', has posted on his Facebook page that his friend has committed suicide.
06:19 PM Jul 13, 2024 IST | Chella
Advertisement

சூரியவம்சம் படத்தில் இடம்பெற்ற 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' பாடலை எழுதியவரும், 'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தின் இயக்குநருமான ரவிசங்கர் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் நண்பர் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

சரத்குமார் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வெளியான சூரியவம்சம் திரைப்படத்தில் இடம் பெற்ற ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. அந்தப் பாடலை இயக்குநர் விக்ரமனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரவிசங்கர் எழுதியிருந்தார். அந்தப் பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. அதன் பிறகு 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

அந்தப் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன. குறிப்பாக, 'எங்கே அந்த வெண்ணிலா' பாடல் பிரபலம் அடைந்தது. அதற்குப் பிறகு சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், சென்னை கே.கே.நகரில் தங்கி இருந்தார். இந்த நிலையில், 63 வயதாகும் ரவிசங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவரின் நண்பர் முகநூல் பகுதியில் பதிவிட்டுள்ளார். ரவிசங்கருக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read More : ’2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் தேடி வரணும்’..!! ’வேலையை ஆரம்பீங்க’..!! எடப்பாடி தடாலடி..!!

Tags :
இயக்குனர் ரவிசங்கர்சூரியவம்சம்தற்கொலைவருஷமெல்லாம் வசந்தம்விசாரணை
Advertisement
Next Article