முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Entry கொடுத்த லாரி.. வெடித்த டீசல் டேங்க்! பதறிய பங்க் ஊழியர்கள்! திக் திக் CCTV காட்சி..!

11:42 AM May 20, 2024 IST | Mari Thangam
Advertisement

தெலங்கானா மாநிலம், புவனகிரியில் பெட்ரோல் பங்கில் நுழைந்த லாரியின் டீசல்டேங்க் வெடித்து தீப்பற்றியது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisement

தெலங்கானா மாநிலம், புவனகிரி புறநகர் பகுதியில் அமைந்துள்ள நயாரா பெட்ரோல் பங்கில் நேற்று ஒரு லாரி டீசல் நிரப்ப பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென லாரியின் டீசல் டேங்க் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் உடனடியாக பெட்ரோல் பங்கில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வந்து துரிதமாக செயல்பட்டு, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த தீ விபத்து சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இச்சம்பவம் நிகழ்ந்ததையடுத்து அங்கிருந்தவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தெறித்து ஓடினர். ஆனால், பெட்ரோல் பங்கின் ஊழியர்களில் ஒருவர் மட்டும் துணிவுடன் தீயணைப்பு கருவியை எடுத்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தார். பின்னர் மற்ற ஊழியர்களும் தீயணைப்பு கருவிகளுடன் வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Next Article