For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Solar : செம வாய்ப்பு...! பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு பதிவு முகாம்...!

06:30 AM Mar 01, 2024 IST | 1newsnationuser2
solar   செம வாய்ப்பு     பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கு பதிவு முகாம்
Advertisement

பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கான பதிவு முகாமை அஞ்சல்துறை தொடங்கியுள்ளது.

Advertisement

இது குறித்து அஞ்சல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில்; பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்திற்கான பதிவு முகாமை அஞ்சல்துறை தொடங்கியுள்ளது. இந்தியா முழுவதும் ஒரு கோடி குடும்பங்கள் வரை பயனடையும் வகையில், கூரைகளில் சூரிய தகடு அமைப்பதற்கு மானியம் வழங்குவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான பதிவுக்கு வீடுகளில் தபால்காரர்கள் உதவுவார்கள்.

தூய்மையான, செலவு குறைந்த எரிசக்தி எதிர்காலத்திற்காக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து தனிநபர்களையும நாங்கள் ஊக்குவிக்கிறோம். மேலும் விவரங்களுக்கு https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தைக் காணவும் அல்லது பகுதி தபால்காரரையும், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : The Department of Posts has started the registration campaign for Prime Minister's Solar Home Free Electricity Scheme.

Advertisement