விருப்பத்துடன் உடலுறவு கொண்டாலும் புகைப்படம் எடுப்பது குற்றம்..!! - டெல்லி உயர்நீதிமன்றம்
இருவர் உடலளவில் ஒன்றாக இருந்தாலும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது குற்றம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்படி எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, இருவர் சம்மதத்துடன் உடலுறவு கொண்டாலும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது குற்றம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான வாதத்தின் போது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ணகாந்த சர்மா இந்த தீர்ப்பை வழங்கினார். அவர் கூறுகையில், அந்தரங்க புகைப்படங்கள் வரும் காலங்களில் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக நீதிபதி தெரிவித்தார். எனவே இதுபோன்ற செயல்களை புறக்கணிக்க முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
பாலியல் உறவுகள் தொடர்பான வழக்குகளில், இரு தரப்பினரும் ஒப்புதல் அளிப்பதால், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட அனுமதிக்க முடியாது என்று நீதிபதி கூறினார். இது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மீறுவதாகவோ, அவமதிப்பதாகவோ இருக்கும் என்றார். எனவே, இதுபோன்ற வழக்கை குற்றமாக கருத வேண்டும் என தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
Read more ; ஜல்கான் ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு.. 15 பேர் நிலை கவலைக்கிடம்..!!