For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"பத்து ஆண்டுகளில் அரசியல் வரையறை மாறிவிட்டது" -ஜே.பி நட்டா

07:31 PM Apr 12, 2024 IST | Mari Thangam
 பத்து ஆண்டுகளில் அரசியல் வரையறை மாறிவிட்டது   ஜே பி நட்டா
Advertisement

பாஜக ஆட்சி அமைத்த இந்த 10 ஆண்டுகளில் அரசியலின் வரையறை மாறி விட்டதாக பாஜக தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சித்தி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜேஷ் மிஸ்ராவை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், “கடந்த 10 ஆண்டு கால பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் அரசியலின் வரையறை மாறிவிட்டது. மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதில்லை என்றும்,  சாதி அல்லது வர்க்கத்தின் அடிப்படையில் அவர்கள் பிளவுபடுவதில்லை எனவும் கூறினார்.

மக்களை பிரித்து வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ் ஆல் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது. வரையறை மாறிவிட்டதால் வாக்கு வங்கி மூலமாகவோ, மக்களை ஏமாற்றுவதன் மூலமாகவோ இனி அரசியல் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளுக்கு  ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7 மற்றும் மே 13 ஆகிய தேதிகளில்  நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேசத்தில் பாஜக 28 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement