For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மேலும் ஒருவர் பலி!! - விஷச்சாராய உயிரிழப்பு 65 ஆக உயர்வு!!

The death toll has risen to 65 following the death of two more people who were being treated for poisoning in Kallakurichi.
05:10 PM Jun 28, 2024 IST | Mari Thangam
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மேலும் ஒருவர் பலி     விஷச்சாராய உயிரிழப்பு 65 ஆக உயர்வு
Advertisement

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18ஆம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். விஷச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட கருணாபுரம் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த 132 பேர் கள்ளக்குறிச்சி,  சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த பெரியசாமி என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனையில் தற்போது 7 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்து வருகின்றனர். அவர்களை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Read more ; பத்திரப் பதிவுத்துறையில் இப்படி ஒரு வசதியா..? எல்லாம் முடிஞ்சு மறுநாளே..!! சூப்பர் அறிவிப்பு..!!

Tags :
Advertisement