பலி எண்ணிக்கை 140ஆக உயர்வு!. பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து கோர விபத்து!. நைஜீரியாவில் அதிர்ச்சி!
Nigeria: நைஜீரியாவின் மஜியா கிராமத்தில் பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் குழந்தைகள் உட்பட 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தின் மஜியா நகரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அதை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் ஓடிச்சென்று கீழே கொட்டி கொண்டிருந்த பெட்ரோலை பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென டேங்கர் வெடித்ததில் தீப்பிடித்தது. இந்த கோர சம்பவத்தில் 140 பேர் பலியாகினர். 50 பேர் படுகாயமடைந்தனர்.
நைஜீரியாவில் கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் 1,531 டேங்கர் லாரிகள் விபத்துக்குள்ளாகின.இதில், 535 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான நைஜீரியாவில், பல இடங்களில் போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படாததால் இதுபோன்ற விபத்துகள் அதிகமாக நிகழ்வதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
Readmore: கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் வெள்ளை எள்..!! இன்னும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா..?