For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாவீரர் அலெக்சாண்டர் மரணம்!… தன் வரலாற்றை உலகம் அறிய செய்தவரின் அவிழாத மர்மம்!

10:00 AM May 15, 2024 IST | Kokila
மாவீரர் அலெக்சாண்டர் மரணம் … தன் வரலாற்றை உலகம் அறிய செய்தவரின் அவிழாத மர்மம்
Advertisement

Alexander: தனதுவீரம், குணநலங்களால் அனைவராலும் தி கிரேட் என்று புகழப்பட்ட அலெக்சாண்டர் கி.மு 356 ஆம் அண்டு மெசபோடோமியா (தற்போதைய கிரேக்கம்) நாட்டில் இரண்டாம் பிலிப் மன்னருக்கு பிறந்தார். தன் தந்தையை பின்பற்றி தானும் ஒரு மிகப்பெரிய வீரனாக வந்தவர் இவர். மக்கள் அவரை கிரேக்க கடவுள் வியூஸ் என்பவரின் மகன் என நம்பினர். கிரேக்கத்தில் ஒரு சிறு நகரில் பிறந்து உலகம் முழுக்க தன் வரலாற்றை அறிய செய்த அந்த மனிதனின் மரணம் இன்றளவும் மர்மமாகவே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Advertisement

அலெக்சாண்டர் தனது 12 வயதிலேயே மிகவும் புத்திசாலியாக இருந்தார். கல்வியிலும் சிறந்து விளங்கினார். யாராலும் அடக்க முடியாத பிலிப் மன்னரின் குதிரையை அலெக்ஸாண்டர் அடக்கியதை கண்டு அனைவரும் திகைத்து நின்றனர். அலெக்சாண்டர் தனது 16 வது வயதிலேயே போர்களில் ராணுவங்களை வழிநடத்த துவங்கியிருந்தார். பைசாண்டியம் என்னும் நாட்டை முற்றுகையிட பிலிப் சென்றிருந்தார் அதனால் தேசத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அலெக்சாண்டரிடம் இருந்தது.

இதற்கிடையே திராசிய மேடி என்கிற அரசு கிரேக்கத்திற்கு எதிராக கலகம் செய்ய இருந்தது. இதை அறிந்த அலெக்சாண்டர் அவர்களை நாட்டை விட்டு விரட்டி தனது நாட்டின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தினார். அலெக்சாண்டர் தனது முதல் வெற்றியை தொடர்ந்து இளம் போர்வீரர் ஆனார். அவருக்கு சில கடமைகள் இருந்தன. அதில் முக்கியமான ஒன்று ஒரு நகரத்தை நிறுவுவது. அப்படியாக அவர் நிறுவிய நகருக்கு அலக்சாண்ட்ரோபோலிஸ் என பெயரிட்டார்.

எனவே 16 வயதிலேயே போரில் வெற்றி பெற்று ஒரு நகரத்தை எழுப்பியிருந்தார் அலெக்சாண்டர். அலெக்சாண்ட்ரியா நகரம் விரைவிலேயே ராஜ்ஜியத்தின் மைய பகுதியாகவும் முக்கியமாக நகரமாகவும் மாறியது. கி.மு 30 வரை இந்த நகரமே முக்கிய நகரமாக இருந்தது. கிமு 326 இல் அலெக்சாண்டரின் படைகள் இறுதியாக வந்த இடம் இந்தியா. இதுவே அலெக்சாண்டர் படை எடுத்து வந்த கடைசி நாடு ஆகும். அலெக்சாண்டரின் மரணம் சம்பவித்த இடமும் இதுவே.

உலகின் கடைசி நாடு இந்தியா. இந்தியா வரை உள்ள அனைத்து நாடுகளையும் கைபற்றி விட்டால் உலகையே கைபற்றியதாக அர்த்தம் என கிரேக்கர்கள் நம்பினர். அலெக்சாண்டர் அவரது படையை விட ஐந்து மடங்கு பெரிய படையை உடைய போரஸ் மன்னரை தோற்கடித்தார். கிரேக்கத்தில் தொடங்கிய மெசபோத்தோமிய சாம்ராஜ்யம் ஆசியா, எகிப்து, பாரசீகம் மற்றும் இந்தியா வரை பரவியது.

அவை மொத்தம் 2 மைல் சதுர கிலோ மீட்டருக்கும் அதிகம் என கூறப்படுகிறது. அலெக்சாண்டர் இந்தியாவை அடைவதற்கு முன்பு அரிஸ்டாட்டில் அவரிடம் “நீங்கள் “பார்ஸ்” (இந்தியா) மக்களை அழித்தீர்கள் என்றால், அது நீங்கள் உலகின் மிகச்சிறந்த தூண் ஒன்றை அழிப்பதாக தான் அர்த்தம்” என கூறியிருந்தார். அப்படியாக இந்தியாவின் பெருமை கிரேக்கம் வரை பரவியிருந்தது.

சுமார் 25 நாடுகளை கைபற்றிய பிறகு அலெக்சாண்டர், இந்த பூமியில் உள்ள எந்த மனிதனை விடவும் ஆயிரம் மடங்கு பெரிய பணக்காரராக தோன்றினார். இப்படி அனைத்திலும் வெற்றி கண்ட அலெக்சாண்டரின் மகத்துவம் எல்லாம் அவர் இறந்தபிறகே உலகம் முழுவதும் சென்றடைந்தது. கி.மு 323 இல் தனது 32வது வயதிலேயே திடீர் காய்ச்சலால் மர்மமான முறையில் அலெக்சாண்டர் தனது கடைசி தேசமான இந்தியாவில் இறந்தார்.

அவர் இறந்த பிறகும் வரலாறு இன்னும் அவரது புகழை கூறிக்கொண்டே உள்ளது. அனைத்து தலைவர்களுக்கும் அவரே முன் மாதிரியாக உள்ளார். இப்படியாக தனது வாழ்க்கையை வரலாற்றில் பதிவு செய்து சென்றவராக அரிஸ்டாட்டிலின் சிஸ்யன், மாசிடோனிய மாவீரன் அலெக்சாண்டர் உள்ளார்.

வரலாற்று குறிப்புகளின் படி, அலெக்சாண்டர் ஜூன் 13 அன்று ஒரு விருந்தின் போது மயங்கி விழுந்து சுமார் பதினைந்து நாட்களுக்குப் பிறகு இறந்தார். ஒரே மூச்சில் ஒரு பௌல் ஒயின் குடிக்கும்படி அலெக்சாண்டருக்கு சவால் விடப்பட்ட பிறகு இது நடந்ததாக கூறப்படுகிறது. விருந்தின் போது அவர் முதுகுவலியால் சுருண்டு விழுந்தார்.

10 நாட்களுக்குப் பிறகு, அலெக்சாண்டரின் வீரர்கள் தங்கள் மன்னரை ஒரு இறுதி முறை பார்க்க அழைத்து வரப்பட்டனர். வரலாற்றாசிரியர் அலெக்சாண்டரின் சுயசரிதையை மேற்கோள் காட்டி, அந்த நேரத்தில் அரசர் "இனி பேச முடியாது, ஆனால் அவர் தலையை உயர்த்த சிரமப்பட்டார் மற்றும் ஒவ்வொருவருக்கும் தனது கண்களால் வாழ்த்து தெரிவித்தார்" என்று குறிப்பிட்டுள்ளது.

அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அலெக்சாண்டரின் உடல் சிதைவுக்கான வழக்கமான அறிகுறிகளைக் காட்டத் தொடங்கவில்லை, இது அவர் ஒரு கடவுள் என்று கூறுவதற்கு வழிவகுத்தது. உலகத்தையே தனது இளம் வயதிலேயே ஆட்டிப்படைத்த வெறும் 32 வயதான அந்த மாவீரர் தனது வாழ்க்கையின் கடைசி நாட்களில் முடங்கிப்போயிருந்தார், இது ஒரு தன்னுடல் தாக்க நோயால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அது அலெக்சாண்டரைப் புதைத்தபோதும் அவர் சுவாசித்துக் கொண்டிருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு தீவிரமாக இருந்திருக்கலாம்.

அலெக்சாண்டர் உயிருடன் புதைக்கப்பட்ட கோட்பாடு உற்சாகமாக இருந்தாலும், அலெக்சாண்டரின் மரணம் மற்றும் அடக்கம் ஆகியவற்றிற்கான மாற்று விளக்கங்களும் உள்ளன. சில வரலாற்றாசிரியர்கள் அவர் இயற்கையான காரணங்களால் இறந்ததாக நம்புகிறார்கள், ஒருவேளை மலேரியா அல்லது டைபாய்டு காய்ச்சலால் இருக்கலாம், சிலர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள். அவரது மறைவுக்கான விவாதங்கள் முடிவற்றவை, இன்னும் சில நூற்றாண்டுகள் கழித்தும் இது தொடரும்.

Readmore: ஆன்லைன் பிளாக்மெயில்!… 1,000க்கும் மேற்பட்ட ஸ்கைப் கணக்குகள் முடக்கம்!… சைபர் கிரைம் அதிரடி!

Advertisement