For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வேகமாக பரவிவரும் கொடிய "லிஸ்டீரியா வைரஸ்"!… கர்ப்பிணி பலி!… அமெரிக்காவில் நாடு தழுவிய எச்சரிக்கை!

07:58 AM Nov 23, 2023 IST | 1newsnationuser3
வேகமாக பரவிவரும் கொடிய  லிஸ்டீரியா வைரஸ்  … கர்ப்பிணி பலி … அமெரிக்காவில் நாடு தழுவிய எச்சரிக்கை
Advertisement

பீச், பிளம்ஸ் மற்றும் நெக்டரைன்களில் பரவிவரும் லிஸ்டீரியா என்ற கொடிய வைரஸ் பாதித்து அமெரிக்காவில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு, 10 பேர் மருத்துவமனையில் அனுமதி. இதனால், அங்கு நாடுதழுவிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுதொடர்பாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் உணவு பாதுகாப்பு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில், இந்தப் பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் ஏதேனும் மாசுபட்டிருக்குமா என்பதை ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகின்றனர். கிங்ஸ்பர்க், கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட எச்எம்சி ஃபார்ம்ஸ் மூலம், இந்த ஆண்டு மே 1 மற்றும் நவம்பர் 15 க்கு இடையில் விற்பனை செய்யப்பட்ட பீச், பிளம்ஸ் மற்றும் நெக்டரைன்களை திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பழங்கள், வால்மார்ட் மற்றும் சாம்ஸ் கிளப் உள்ளிட்ட சில்லறை விற்பனையாளர்களால் அமெரிக்கா முழுவதும் விற்கப்படுகிறது. மேலும், அக்டோபர் பிற்பகுதியில் எச்எம்சி பண்ணைகளில் பீச் மாதிரியை பரிசோதித்ததில் லிஸ்டீரியா வைரஸ் இருந்தது கண்டறியப்பட்டதாகவும், இந்த காலக்கட்டத்தில் வாங்கப்பட்ட பொருட்களை யாரும் உட்கொள்ளவேண்டாம் என்றும் இது தீவிர மற்றும் ஆபத்தான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17ம் தேதி நிலவரப்படி, கலிபோர்னியா, கொலராடோ, புளோரிடா, இல்லினாய்ஸ், கன்சாஸ், மிச்சிகன் மற்றும் ஓஹியோ ஆகிய மாநிலங்களில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், கலிபோர்னியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் இறந்ததாகவும் இது தவிர இந்த வைரஸால், 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் உணவு பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 1,600 பேர் லிஸ்டீரியோசிஸால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் சுமார் 260 பேர் இறக்கின்றனர். இது பொதுவாக அசுத்தமான உணவை சாப்பிடுவதால் ஏற்படும் தொற்று என்றும் கூறப்படுகிறது. இது கர்ப்பிணிப் பெண்கள், புதிதாகப் பிறந்தவர்கள் அல்லது நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு உணவு மூலம் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் வயிற்று வலி உள்ளிட்ட அறிகுறிகளை அனுபவிக்கலாம். இது கருச்சிதைவுகள் மற்றும் பிரசவம் போன்றவற்றையும் ஏற்படுத்தும். மேலும், இது லிஸ்டீரியோசிஸை ஏற்படுத்துகிறது. லிஸ்டீரியா குளிர்சாதனப்பெட்டியில் உயிர்வாழக்கூடியது மற்றும் பிற உணவுகள் மற்றும் மேற்பரப்புகளுக்கு எளிதில் பரவக்கூடியது" என்று உணவு பாதுகாப்பு எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement