செம் வாய்ப்பு...! பஸ் பாஸ் பெற ஏப்ரல் 23-ம் தேதி வரை கால அவகாசம்...!
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆனது அதன் ‘மாதாந்திர பயணிகள் சீசன் டிக்கெட்டுகள் (MST) மற்றும் TAYPT பெறுவதற்கான கால அவகாசம் ஏப்ரல் 23 வரை நீட்டித்துள்ளது.
MTC தனது அனைத்து விற்பனை கவுன்டர்களிலும் ஏப்ரல் 16 முதல் மே 15 வரை பேருந்துகளில் பஸ் பாஸ் மூலம் பயணிக்க 1 முதல் 22 வரை வழங்குகிறது. “ரம்ஜான், தமிழ் புத்தாண்டு மற்றும் லோக்சபா தேர்தல் உட்பட இந்த மாதத்தில் மூன்று விடுமுறைகள் இருந்ததால், மாநகரப் போக்குவரத்து கழகமானது பாஸ் விற்பனையை ஏப்ரல் 23 வரை நீட்டித்துள்ளது.
பேருந்து பயணிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. எம்எஸ்டி பாஸ்கள் சாதாரண மற்றும் விரைவு பேருந்து சேவைகளில் நிலையான பேருந்து நிறுத்தங்களுக்கு இடையே பயணிக்க அனுமதிக்கின்றன. ஆனால் பயணிகள் TAYPT பேருந்தில் பயணம் செய்தால் கூடுதலாக 11 ரூபாய் செலுத்த வேண்டும். TAYPT ஐப் பொறுத்தவரை, பயணிகளுக்கு 1000 ரூபாய் வசூலிக்கப்படும், மேலும் அவர்கள் ஏசி பேருந்துகள் தவிர அனைத்து பேருந்துகளிலும் பயணம் செய்யலாம்.