முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆசிரியர்கள் வைத்த கோரிக்கை... அனைத்து பள்ளிகளுக்கும் அதிரடியாக பறந்த உத்தரவு...!

The deadline for conducting school-level art festival competitions has been extended.
06:25 AM Sep 20, 2024 IST | Vignesh
Advertisement

பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; 2024 -25 ஆம் ஆண்டிற்கான பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நடத்துவது சார்ந்து தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் பள்ளி அளவில் போட்டிகள் நடத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு சார்ந்து மாவட்டங்களிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றதைத் தொடர்ந்து , பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றியாளர்களின் விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்வதற்கு 27.09.2024 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது .

Advertisement

இப்போட்டிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ( சிறப்புப் பள்ளிகள் உட்பட ) அனைத்து மாணவ , மாணவியருக்கும் வாய்ப்பளித்தல் வேண்டும் . இந்த விவரத்தினை அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் ( சிறப்புப் பள்ளிகள் உட்பட ) தெரிவித்து மாணவர்களை பங்கேற்க அறிவுறுத்துமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
art festival competitionEdu departmentschooltn government
Advertisement
Next Article