முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’மாநாடு நடத்தும் தேதி பருவமழை காலமா இருக்கு’..!! ’என்ன பண்ணலாம்னு இருக்கீங்க’..? தவெக-வுக்கு மீண்டும் நோட்டீஸ்..!!

As the first conference of Thaveka is about to take place, the police has again sent a notice to the party's general secretary.
10:56 AM Oct 16, 2024 IST | Chella
Advertisement

தவெகவின் முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு காவல்துறையினர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ளதால், 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநாட்டு திடலில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் மாநாட்டுப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தவெக மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்புக் கோரி, கட்சி சார்பில் ஏற்கனவே அளிக்கப்பட்ட கடிதங்களின் அடிப்படையில் 33 நிபந்தனைகளை விதித்த காவல்துறை, அவற்றில் 17 நிபந்தனைகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்தியிருந்தது. இதனால், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் கூடுதல் விளக்கங்களைக் கேட்டு, விக்கிரவாண்டி டி.எஸ்.பி. நந்தகுமார் கடந்த 14ஆம் தேதி நோட்டீஸ் வழங்கினார்.

இதை புஸ்ஸி ஆனந்த் சார்பில், விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு வந்த தவெக தொகுதிப் பொறுப்பாளர் சக்திவேல் பெற்றுக் கொண்டார். அந்த நோட்டீஸில் காவல்துறை சார்பில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் பின்வருமாறு; “தவெக மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து 1.50 லட்சம் பேர் வந்து பங்கேற்பர் என்றும், இதற்காக 50,000 நாற்காலிகளும், மாநாட்டுக்கு ரசிகர்களும், பொதுமக்களும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வர உள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள்.

மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த விழுப்புரம் - சென்னை சாலையில் 28 ஏக்கர் நிலமும், கூடுதலாக 15 ஏக்கர் நிலமும், வடதமிழ்நாட்டிலிருந்து வரும் வாகனங்களை நிறுத்த 40 ஏக்கர் நிலமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளீர்கள். எனவே, இதற்கான திட்டத்தையும், வரைபடத்தையும் காவல்துறை வசம் வழங்க வேண்டும்.

மாநாடு நடைபெறும் தினம் வடகிழக்கு பருவமழைக் காலமாக இருப்பதால், வாகன நிறுத்துமிடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்பு இருக்கிறது. இதனால், வாகனங்களை சிரமமின்றி நிறுத்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து வருகிற வாகனங்களான கார், பேருந்து, வேன் ஆகியவற்றின் விவரங்களை காவல்துறைக்கு வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ”அம்மா உணகங்களில் இலவச உணவு”..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

Tags :
tvkvijayதமிழக வெற்றிக் கழகம்தவெக மாநாடு
Advertisement
Next Article