பள்ளிகள் திறப்பு தேதியில் அதிரடி மாற்றம்..? விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!! செம குஷியில் மாணவர்கள்..!!
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், அந்த தேதியில் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்தல் காரணமாக மற்ற வகுப்புகளுக்கும் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் 10 , 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 6ஆம் தேதியும் 10ஆம் தேதியும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளி மீண்டும் எப்போது தொடங்கும் என்ற கேள்வி பெற்றோர் மத்தியில் எழுந்தது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளதால், ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், ஜூன் 6ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
இந்நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது ஜூன் 6ஆம் தேதி பள்ளி துவங்கினால் அடுத்து ஒரு நாள் தான் பள்ளி இயங்கும் என்பதால், ஜூன் 10ஆம் தேதி அதாவது திங்கள்கிழமை முதல் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். இதனால் பள்ளி திறப்பு தேதியில் மீண்டும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.