”கோயில்களில் ஆண்கள் மேலாடையை கழற்றி செல்லும் வழக்கம் தேவையில்லை”..!! சிவகிரி மடத்தின் தலைவர் சுவாமி சச்சிதானந்தா கருத்து..!!
கேரளாவில் உள்ள பல கோவில்களில் ஆண்களின் மேலாடையை கழற்றச் சொல்லும் வழக்கத்தை கைவிட வேண்டும் என்று கேரளாவைச் சேர்ந்த சிவகிரி மடத்தின் தலைவர் சுவாமி சச்சிதானந்தா தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ நாராயண குருவால் நிறுவப்பட்ட சிவகிரி மடத்தின் தலைவர் சுவாமி சச்சிதானந்தா. இவர் கூறுகையில், “ஆண் பக்தர்களை கோயிலுக்குள் நுழைய சட்டையை கழற்றச் சொல்வது, ஸ்ரீ நாராயண குருவின் பிரசங்கங்களுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளார். இது ஒரு சமூகக் கேடு, இதை ஒழிக்க வேண்டும்.
கோயிலுக்குள் நுழைபவர்கள் பூணூல் அணிந்திருக்கிறார்களா என்று பார்க்க பக்தர்களை சட்டையைக் கழற்றச் சொல்லும் வழக்கம் முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதை ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் போன்ற அமைப்புகள் கவனிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
நமது பாரத தேசத்திற்கு கர்ம பூமி என்று தனிச்சிறப்பு உள்ளது. அதற்கு காரணம்
இங்குள்ள பழக்கவழக்கங்கள் அனைத்தும் மனிதன் வாழும் காலத்தில் அவனை
பண்படுத்தி, வாழ்க்கைக்கு பிறகு அவனை மோட்சம் அடைய வைப்பதாக
உள்ளது. அப்படிப்பட்ட பழக்க வழக்கங்களில் ஒன்றுதான் நாம் ஆலயங்களுக்கு
சென்றால் சட்டையை கழற்றிவிட்டு வெற்று உடம்புடன்
சென்று வழிபட வேண்டும். ஏனென்றால், உடலை முழுவதுமாக மறைத்தபடி துணி இருந்தால் கோவிலில் உள்ள பிராண சக்தியை முழுவதுமாக நம் உடல் கிரகிக்க முடியாது என்பதால், இவ்வாறு சட்டையை கழற்றிவிட்டு தரிசிக்க செல்ல வேண்டும் என கூறப்படுகிறது.
"ஓம்"என்ற பிரணவத்தோடு மந்திரங்களைச் சொல்லி, பல அபிஷேகங்களை
செய்யும்போது, மின்னூட்டக்கதிர்கள் வெளிப்படுகின்றன. அந்த மின்னூட்டக்
கதிர்கள் நம் மீது படும்போது உடம்புக்கு ஆரோக்கியத்தையும், மனதிற்கு
அமைதியையும் தருவதாக அறிவியலாளர்கள் கூட ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
Read More : புத்தாண்டை முன்னிட்டு சிலிண்டர் விலை அதிரடியாக குறைந்தது..!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!! எவ்வளவு தெரியுமா..?