2024-25 நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 5.85% அதிகரிப்பு...!
2024-25 நிதியாண்டில் நாட்டின் நிலக்கரி உற்பத்தி 5.85% அதிகரித்துள்ளது.
2024 செப்டம்பர் மாதத்தில் நிலக்கரி உற்பத்தியில், நிலக்கரி அமைச்சகம் கணிசமான அளவுக்கு முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 68.94 மில்லியன் டன் உற்பத்தியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இருந்த 67.26 மில்லியன் டன் உற்பத்தியை விட 2.49% அதிகமாகும். இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. கூடுதலாக, ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி (2024 செப்டம்பர் வரை) நிதியாண்டு 24-25-ல் 453.01 மில்லியன் டன்னை (தற்காலிகமானது) எட்டியுள்ளது. நிதியாண்டு '23-24-ன் இதே காலகட்டத்தில் 427.97 மில்லியன் டன் என்ற அளவுடன் ஒப்பிடும்போது, இது 5.85% வளர்ச்சி ஆகும்.
கூடுதலாக, நிலக்கரி அனுப்புதலும் செப்டம்பர் 2024 இல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. 23-24 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 70.31 மில்லியன் டன் என்ற அளவுடன் ஒப்பிடும்போது 73.37 மில்லியன் டன்னை எட்டியது. இது 4.35% வளர்ச்சி ஆகும். ஒட்டுமொத்த நிலக்கரி அனுப்புதல் (2024 செப்டம்பர் வரை) நிதியாண்டு 24-25-ல் 487.87 மில்லியன் டன் (தற்காலிகமானது) ஆக இருந்தது, இது நிதியாண்டு '23-24 இல் இதே காலகட்டத்தில் 462.27 மில்லியன் டன்னாக இருந்தது. இது 5.54% வளர்ச்சி ஆகும்.
மேலும், நிலக்கரி கையிருப்பும் ஓரளவு அதிகரித்துள்ளது. 2024 செப்டம்பர் 29-ம் தேதி நிலவரப்படி மொத்த நிலக்கரி கையிருப்பு 33.46 மில்லியன் டன்னாக இருந்தது. 2023 செப்டம்பர் 29 நிலவரப்படி 22.15 மில்லியன் டன் இருப்பு இருந்தது. இது 51.07% வளர்ச்சி என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.