நாடே அதிர்ச்சி!. 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!. மக்கள் அச்சம்!
Bomb threat: கடந்த 11 நாட்களில், இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் கிட்டத்தட்ட 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சிலநாட்களாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அதிகரித்து வருகிறது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மிரட்டல் வந்தவுடன் ஆங்காங்கே விமானங்களும் அவசரமாக தரையிக்கப்படுகின்றன. சில விமானங்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன. இதையடுத்து, முறையாக சோதனை நடத்தப்பட்ட பின்னரே, விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தநிலையில், ஏர் இந்தியா, விஸ்டாரா, இண்டிகோ நிறுவனங்களைச் சேர்ந்த தலா 20-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதேபோன்று ஆகாஸா ஏர் நிறுவனம் தனது 14 விமானங்களுக்கு இதேபோன்ற மிரட்டலை எதிர்கொண்டது. நேற்று ஒரே நாளில் 70-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வீமான பாதுகாப்பு படை உஷார்படுத்தப்பட்டு பாதுகாப்பு நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. ஒரே சமூக வலைதள கணக்கிலிருந்து இதுபோன்று தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கப்படும்பட்சத்தில் விமானத்தை திருப்பிவிடாமல் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய விமான நிறுவனங்கள் கடந்த 11 நாட்களில் மட்டும் 250 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலை சந்தித்துள்ளன. இந்த வாரத்தில் மட்டும் 160 மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விமான நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன வட்டாரங்கள் தெரிவித்தன.
Readmore: Work From Home – அலுவலக வேலை!. எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது?. ஆய்வில் வெளியான தகவல்!