தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம்..!!
தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நாளை முதல் தொடங்க உள்ளது.
தமிழ்நாட்டில் இன்ஜினியரிங் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் மே மாதம் 6ம் தொடங்கியது. அதன்படி அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக வளாக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக் கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்காக விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர்.
அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து 9 ஆயிரத்து 545 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதியாக ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 10-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 22 முதல் 27 வரை நடைபெறும் என்றும், அதன் பிறகு ஜூலை29 முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதன்படி, சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நாளை (22-ம்தேதி) தொடங்குகிறது.
Read more ; அடேங்கப்பா!! உலகின் மிக உயரமான ATM இதுதான்..!! எங்கே உள்ளது தெரியுமா?