முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"ராம் ராம்..!இது ட்ரெய்லர் தான்.. ஜெயிச்சதுக்கு அப்புறம் மெயின் பிக்சர்.!" பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி.!

12:06 PM Feb 03, 2024 IST | 1newsnationuser4
Advertisement

2024 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறாவது முறையாக மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பொதுத் தேர்தல்கள் வருகின்ற மே மாதம் நடைபெற உள்ள நிலையில் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

ஜனவரி 31ஆம் தேதி பாராளுமன்றம் பட்ஜெட் கூட்டத்துடன் கூட்டப்பட்டது. இந்திய ஜனாதிபதியின் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரில் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றமான ஒன்றாக இருந்தது. கேஸ் மானியம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு ஓய்வூதியம் மற்றும் அரசு ஊழியர் சலுகைகள் போன்ற இந்த வித அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தன. இந்நிலையில் 2024 ஆம் வருட இடைக்கால பட்ஜெட் பற்றி பேசிய பிரதமர் மோடி பொதுத்தேர்தலில் வெற்றிக்குப் பிறகு நாட்டின் வளர்ச்சியை முழுமூச்சாக கொண்ட முழுமையான பட்ஜெட் வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார். மேலும் தங்களது அரசு பாரம்பரிய முறையை பின்பற்றி இடைக்கால பட்ஜெட்டை தற்போது தாக்கல் செய்திருக்கிறது. இது முழுமையான பட்ஜெட் இல்லை.

நாங்கள் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாட்டு மக்கள் அனைவருக்கும் மன வளர்ச்சி என்பது தான் புதிய பட்ஜெட்டில் முக்கியத்துவம் பெறும். கடவுளின் அருள் எல்லோருக்கும் நிலவட்டும் 'ராம் ராம்' என்று தனது பட்ஜெட் குறித்த உரையில் பேசியிருக்கிறார் மோடி.

Tags :
Budget 2024electionsnarendra modinirmala seetharamanRam ram
Advertisement
Next Article