For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னை மக்களே... 15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும்...! மாநகராட்சி முக்கிய அறிவிப்பு...! என்ன தெரியுமா...?

The city has invited public comments on wastewater management.
08:37 AM Nov 18, 2024 IST | Vignesh
சென்னை மக்களே    15 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும்     மாநகராட்சி முக்கிய அறிவிப்பு     என்ன தெரியுமா
Advertisement

மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் 'நீர் பிளஸ்’ தரச்சான்று பெற சென்னை மாநகராட்சி விண்ணப்பித்துள்ளது. இதற்காக மாநகர கழிவுநீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் கருத்து தெரிவிக்க அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் அனைத்து வீட்டு உபயோக நீா் மற்றும் கழிவுநீா் சேகரிக்கப்பட்டு கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு சுத்திகரிப்பு நிலையம் மூலம் மறுசுழற்சி செய்து மீண்டும் மாற்றுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த நடைமுறை சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம் மூலம் பின்பற்றப்படுகிறது. அதனால் நீா் பிளஸ் நகரம் எனும் அங்கீகாரத்தை பெற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, பொதுமக்கள் 15 நாட்களுக்குள்ளாக solidwastecorp7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, மாநகர கழிவுநீர் மேலாண்மை குறித்து தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement