OLA-வின் தலைமை நிதி அதிகாரி திடீர் ராஜினாமா!
இந்தியாவின் முன்னணி வாடகை வாகன தளமான ஓலா நிறுவனத்தில், தலைமை நிதி அதிகாரியாக 7 மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற கார்த்திக் குப்தா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
7 மாதங்களுக்கு முன்பு ஓலாவில் இணைந்த கார்த்திக் குப்தா , நிதி மூலோபாயம் ,வளர்ச்சி, வரி மற்றும் முதலீட்டாளர்களுடன் தகவல் தொடர்பு உள்ளிட்ட பிரிவுகளுக்கு தலைமை பொறுப்பு வகித்தார். கார்த்திக் குப்தா, ஓலாவில் பணிக்கு சேர்வதற்கு முன்பு 17 ஆண்டுகள் பிராக்டர் மற்றும் கேம்பலின் துணை தலைவராகவும், ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், தலைமை நிதி அதிகாரியாக 7 மாதங்களுக்கு முன்பு பதவியேற்ற கார்த்திக் குப்தா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கார்த்திக் குப்தா பதவி விலகல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் ஓலா, தங்கள் நிறுவனத்தின் மறுகட்டமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாகவே கார்த்திக் குப்தா பதவி விலகி இருக்கிறார் என தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒலா செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஓலா மொபிலிட்டி நிறுவனத்தின் தற்போதைய மறுகட்டமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தலைமை நிதி அதிகாரி கார்த்திக் குப்தா பதவி விலகியுள்ளார்.செயற்கை நுண்ணறிவு செயல்திறனை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு மறு கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன" எனத் தெரிவித்தார்.
நிறுவனத்தின் வளர்ச்சியை மையமாக கொண்டு தற்போது மறுகட்டமைப்பு பணிகள் ஒலா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே ஓலா ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பவிஷ் அகர்வாலின் சகோதரர் அங்குஷ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரமாண்ட கப்பலில் ஆனந்த் அம்பானியின் இரண்டாவது ப்ரீ-வெட்டிங் கொண்டாட்டம்!