முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ்.. எதற்கெல்லாம் அனுமதி? எப்படி செல்வது? முழு விவரம் உள்ளே..!!

The Chennai Formula 4 Racing Circuit is set to host the Formula 4 Racing Circuit and Indian Racing League car races by the Sports Development Authority of Tamil Nadu (SDAT).
01:40 PM Aug 29, 2024 IST | Mari Thangam
Advertisement

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை நடத்த உள்ளது. ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய இரு தினங்கள் இந்த ரேஸ் நடைபெற உள்ளது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இப்பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த சர்க்யூட் தீவு திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் அமைந்துள்ளது.

Advertisement

எப்படி செல்வது?

கார் ரேஸ் போட்டிகளைக் காணச் செல்வோர் மெட்ரோ ரயில் மூலமாகச் செல்லலாம். மவுண்ட் ரோடு, அண்ணா சதுக்கம், பிராட்வே செல்லும் பேருந்துகளிலும் செல்லலாம். மேலும், சொந்த வாகனங்களில் செல்பவர்கள் பார்க்கிங் செய்வதற்கான இடங்களும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பார்க்கிங் ஸ்லாட்: கிராண்ட் ஸ்டாண்ட் 1, அண்ணா சாலை முத்துசாமி பாலம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்வோர் தங்கள் வாகனங்களை எம்.எம்.சி கிரிக்கெட் மைதானத்தில் நிறுத்திச் செல்லவேண்டும். சுவாமி சிவானந்தா சாலையில், கிராண்ட் ஸ்டாண்ட் 2, கிராண்ட் ஸ்டாண்ட் 3, கிராண்ட் ஸ்டாண்ட் 4, கிராண்ட் ஸ்டாண்ட் 5 ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. அங்கு செல்வோர் தங்கள் வாகனங்களை கலைவாணர் அரங்கத்தில் நிறுத்திச் செல்லவேண்டும்.

கோல்டு, பியர்ல் கிராண்ட் ஸ்டாண்ட் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ளது. HMR, ஸ்பான்ஸ்ர்கள் ஓய்வறை, பிரிமியம் ஓய்வறை ஆகியவையும் தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்பவர்கள் சென்னை பல்கலைக்கழகம், கடற்கரையில் வாகனங்களை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்களின் விவரம் ;

கூர்மையான பொருள்கள் – பிளேடுகள், கத்திகள், கத்தரிக்கோல், ஆயுதங்கள், பாக்கெட் கத்திகள், பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள் போன்றவை.

ஆயுதங்கள் - துப்பாக்கிகள், கத்திகள், சுவிஸ் இராணுவ கத்திகள் போன்றவை

லேசர்ஸ் - லேசர் லைட்டுக்ள்

விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள் - வழிகாட்டி நாய்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சேவை விலங்குகள் தவிர.

ஒலி அமைப்புகள் - ஏர் ஹார்ன்கள், விசில் போன்ற சத்தம் எழுப்பக்கூடிய பொருட்கள், மெகாஃபோன்கள், இசைக்கருவிகள், போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள்.

தீப்பற்றக்கூடிய பொருட்கள் – தீப்பெட்டிகள், பட்டாசுகள், எளிதில் எரியக்கூடிய திரவங்கள், மதுபானம் போன்றவை.

போதைப்பொருள் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்கள் - போட்டி நிகழ்வில் போதைப்பொருட்களைக் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏதேனும் விதிமீறல் தெரிந்தால் நீங்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவீர்கள்.

அங்கீகரிக்கப்படாத விளம்பர பொருட்கள் - ஃபிளையர்கள், ஸ்டிக்கர்கள், கடற்கரை பந்துகள், பரிசுகள் போன்றவை.

முகாம் உபகரணங்கள் - கூடாரங்கள், ஸ்லீப்பிங் பேக்ஸ், குடைகள் அல்லது நிழல் கட்டமைப்புகள் போன்றவை

பாட்டில்கள் - வெளிப்புற உணவு மற்றும் பானங்கள் அனுமதிக்கப்படாது

தொழில்முறை ஆடியோ ரெக்கார்டிங் உபகரணங்கள் - அனைத்தும் (ஊடகங்கள்/பத்திரிகை பணியாளர்களை தவிர).

தனியர் வாகனங்கள் - ஸ்கேட்போர்டுகள், ரோலர்பிளேடுகள், ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள், வண்டிகள் அல்லது தனிப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட வாகனங்கள் போன்றவை அனுமதி இல்லை.

தனிப்பட்ட பொருட்கள்/உபகரணங்கள் - கைப்பைகள், குடைகள், லேப்டாப், லேப்டாப் பைகள், சூட்கேஸ், பெரிய மின்விசிறிகள், மோட்டார் சைக்கிள் தலைக்கவசம், தலைக்கவசங்கள் போன்றவை (பெண்களின் கைப்பைகள் மற்றும் போர்ட்டபிள் நெக் ஃபேன்கள் தவிர)

விற்பனையாளர் ஊர்திகள் எந்த வகையிலும் அனுமதி இல்லை

வீசும்பொருட்கள் - தண்ணீர் பலூன்கள், முட்டை, பிளாஸ்டிக் பாட்டில் மூடிகள்

மற்றவை - ஸ்ப்ரே பெயிண்ட்ஸ், ஃபேண்டம் ஸ்டிக் லைட்ஸ், ஹாம்மோக்ஸ், டோடெம்ஸ் போன்றவை.

Read more ; சிறையில் சொகுசு வசதி..!! வேறு சிறைக்கு மாற்றப்பட்ட பிரபல நடிகர் தர்ஷன்..!!

Tags :
Chennai Formula 4 RacingSports Development AuthorityTamilnaduசென்னை
Advertisement
Next Article