முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மதுரை எலியார்பத்தி சுங்க சாவடியில் கட்டண உயர்வுக்கு விலக்கு..!! - தேசிய நெடுஞ்சாலைத் துறை

The Central Highways Department has announced that Madurai Eliyarpatti toll booth has been exempted from the toll hike while the toll hike has come into effect at 25 toll booths since midnight.
09:37 AM Sep 01, 2024 IST | Mari Thangam
Advertisement

25 சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு நல்லிரவு முதல் அமலுக்கு வந்த நிலையில், மதுரை எலியார்பத்தி சுங்க சாவடியில் கட்டண உயர்வில் இருந்து விலக்கு அளித்துள்ளதாக மத்திய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.

Advertisement

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச் சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் இவை வருகின்றன.. இந்த அமைச்சகம் நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்து வருகிறது.

முன்னதாக, 25 சுங்கச் சாவடிகளில் செப்டம்பர் மாதம் முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என சொல்லப்பட்டது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த கட்டண உயர்வு, அமலுக்கு வந்தது.இந்த கட்டண உயர்வு 10 சதவீதம் வரை இருக்கும். வாகனத்தின் வகையை பொருத்து ரூ 5 முதல் ரூ150 வரை கட்டண உயர்வு இருக்கும். பண்டிகை, விடுமுறை நாட்களில் தனியார் வாகனங்கள் அதிகமாக செல்வதால் சுங்கக் கட்டண வருவாய் அதிகரித்துள்ளது.

அதன்படி, விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மதுரை எலியார்பத்தியில் உள்ள சுங்க சாவடியில் கட்ட உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.

Read more ; அடுத்த சிக்கல்…! செந்தில் பாலாஜிக்கு செக்… ஊழல் வழக்கில் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி…!

Tags :
Central Highways DepartmentMadurai Eliyarpatti toll booth
Advertisement
Next Article