"தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய அரசு பணியப் போகிறது"..!! குட் நியூஸ் சொன்ன முதல்வர் ஸ்டாலின்..!!
”நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரலுக்கு மத்திய அரசு பணியப் போகிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கட்சி, அரசு என எத்தனை வேலைகள் இருந்தாலும் கொளத்தூர் தொகுதிக்கு வந்தால் மகிழ்ச்சி தான். கடந்த 2017இல் மாணவி அனிதா உயிரை மாய்த்துக் கொண்ட போது நாமெல்லாம் பெரிய வேதனைக்கு ஆளானோம்.
நீட் தேர்வு அனிதாவின் கனவை சிதைத்து விட்டது. அனிதா நம்மை விட்டு பிரிந்தபோது தாங்க முடியாத வேதனையில் ஆழ்ந்தோம். ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிரான, சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலுக்கு மத்திய அரசு பணியப் போகிறது. இன்று இல்லாவிட்டாலும், நாளைக்கு, நாளைக்கு இல்லாவிட்டாலும் நாளை மறுநாள் நீட் தேர்வு கோரிக்கை நிறைவேற்றப்படும்.
அரசின் திட்டங்கள் பற்றி முழுமையாக அறியாமல் எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன. நாட்டில் பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிடுகிறது. கோட்டைகளில் இருந்து பிறப்பிக்கப்படும் திட்டங்கள் களத்தில் வெற்றி பெறுகிறதா..? என ஆய்வு செய்வதால் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் பெய்த தொடர் மழையிலும் கூட தண்ணீர் தேங்காமல் திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்” என்று பேசினார்.
Read More : இந்த முருகன் கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் நடைபெறாது..!! ஏன் தெரியுமா..? பக்தர்களே தெரிஞ்சிக்கோங்க..!!