முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மானியம் வேணுமா? அப்போ சீக்கிரம் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துங்க..!! - மின்சார வாரியத்துக்கு பறந்த உத்தரவு

The central government has warned the Tamil Nadu government that if the smart meter project is not implemented quickly in Tamil Nadu, the subsidy will not be available.
02:00 PM Sep 05, 2024 IST | Mari Thangam
Advertisement

தமிழக மின் வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்கவும், மின் பயன்பாட்டில் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கவும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கொண்டுவரப்போவதாக மின்வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கான டென்டரும் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.

Advertisement

இப்படிப்பட்ட சூழலில், ஸ்மார்ட் மீட்டர் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்தியா முழுதும் மறுசீரமைக்கப்பட்ட மின் பகிர்மான திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தியுள்ள நிலையில், மின் இழப்பை பூஜ்ஜியமாக குறைக்க, புதிய மின் வழித்தடம் அமைக்கப்பட வேண்டும் என்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது. அத்துடன், மின்சாரம் விற்பனைக்கு ஏற்ப வருவாய் கிடைப்பதை உறுதி செய்ய, டிரான்ஸ்பார்மர், மின் வழித்தடங்களில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளதால், நாடு முழுதும் மறுசீரமைக்கப்பட்ட மின் பகிர்மான திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.

எனவேதான், மறுசீரமைப்பு திட்டத்தை, தமிழகத்தில், 10,600 கோடி ரூபாயில் மேற்கொள்ள, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், மத்திய அரசு, 6,360 கோடி ரூபாயை கடனாகவும் வழங்குகிறது. இந்த நிதியாண்டிற்குள் திட்ட பணிகளை முடித்து விட்டால், மத்திய அரசு தரும் கடனை திரும்ப செலுத்த தேவையில்லை. அந்த கடன் மானியமாகி விடும். இல்லாவிட்டால் வட்டியுடன், கடனை திரும்ப செலுத்த வேண்டியிருக்கும். அதனால்தான், வீடு, வணிக நிறுவனங்களில் துல்லியமாக மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, ஆளில்லாமல் தொலைத்தொடர்பு வசதியுடன் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்த, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த எச்சரிக்கை காரணமாக தமிழக அதிகாரிகள் இதுதொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருப்பதால் மின்துறை அமைச்சர், முக்கியமான உயரதிகாரிகள் முக்கிய முடிவுகளை எடுத்து முதலமைச்சரின் ஒப்புதலைப் பெறவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more ; ஹரியானா தேர்தல்.. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ரஞ்சித் சிங் சவுதாலா..!! என்ன விவகாரம்?

Tags :
central govtSmart MeterSubsidy
Advertisement
Next Article