For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Onion: 5 லட்சம் டன் வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு...!

09:31 AM Mar 27, 2024 IST | Vignesh
onion  5 லட்சம் டன் வெங்காயத்தை  நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு
Advertisement

நடப்பு ஆண்டில், ரபி பருவ அறுவடை சந்தைக்கு வரத் தொடங்கி உள்ள நிலையில், கூடுதல் கையிருப்புத் தேவைக்காக 5 லட்சம் டன் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யத் தொடங்குமாறு தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பான NCCF மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான NAFED ஆகிய நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

நேரடி பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்படுவதை உறுதி செய்ய NAFED மற்றும் NCCF ஆகியவை விவசாயிகளை முன்கூட்டியே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் ஆண்டு வெங்காய உற்பத்தியில் 72 முதல் 75 சதவீதம் ரபி பருவத்தில் கிடைக்கிறது. காரீப் வெங்காயத்துடன் ஒப்பிடும்போது, இது சிறந்த தன்மையைக் கொண்டிருப்பதாலும், நவம்பர் அல்லது டிசம்பர் வரை விநியோகத்திற்காக சேமித்து வைக்க முடியும் என்பதாலும் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ஆண்டு முழுவதும் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு ரபி பருவ வெங்காயம் முக்கியமானதாகும். நுகர்வோர் விவகாரங்கள் துறை, NAFED மற்றும் NCCF மூலம், 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 6.4 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை வாங்கியது. நாஃபெட் மற்றும் என்சிசிஎஃப் ஆகியவற்றின் தொடர்ச்சியான கொள்முதல் 2023 ஆம் ஆண்டில் ஆண்டு முழுவதும் வெங்காய விவசாயிகளுக்கு லாபகரமான விலைக்கு உத்தரவாதம் அளித்தது.

Advertisement