முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு செக்!! ரூல்ஸ் எல்லாம் மாறுது.. இனி லேட்டா வந்தா போச்சு..!!

The central government has issued a strict warning circular to central government and non-central government employees across the country.
10:07 AM Sep 05, 2024 IST | Mari Thangam
Advertisement

நாடு முழுக்க உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு அனுப்பி உள்ளது. அதில் பணியின் போது காலதாமதமாக வருவது, பணி முடியும் முன்பே அலுவலகத்தை விட்டு செல்லும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

Advertisement

மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், இருப்பிடத்தைக் கண்டறிதல் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவற்றை வழங்கும் மொபைல் ஃபோன் அடிப்படையிலான முக அங்கீகார அமைப்பைப் பயன்படுத்த பணியாளர் அமைச்சகம் பரிந்துரைத்து உள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியும்.

எச்சரிக்கைகள் : 

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், அனைத்து MDO களும் வருகை அறிக்கைகளை தவறாமல் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. வழக்கமாக தாமதமாக வருகை தருவது மற்றும் அலுவலகத்திற்கு முன்கூட்டியே வெளியேறுவது ஆகியவை தீவிரமாகப் கண்காணிக்கப்பட வேண்டும். தற்போதைய விதிகளின் கீழ் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வராதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படலாம்.

அனைத்து மத்திய அரசு துறைகளின் ஊழியர்கள் தங்கள் வருகையை AEBAS எனப்படும் ஆதார் அடிப்படையிலான வருகை அட்டவணையை பயன்படுத்தி தவறாமல் குறிக்க வேண்டும். இதை மிஸ் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள MDO களின் அனைத்து HOD களும் தங்கள் ஊழியர்களுக்கு அலுவலக நேரம், தாமதமாக வருகை போன்ற விஷயங்களை சரியாக கடைபிடிக்கிறார்களா என்று கண்காணிக்க வேண்டும்.

அதேபோல் அவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட அறிக்கையைwww.attendance.gov.inபோர்ட்டலில் இருந்து தொடர்ந்து பதிவிறக்கம் செய்து, சரியான நேரத்திற்கு வர தவறியவர்களை அடையாளம் கண்டு ஆக்சன் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே உள்ள விதிகளை மேற்கோள் காட்டி, தாமதமாக வருகை தரும் ஒவ்வொரு நாளுக்கும் அரை நாள் சாதாரண விடுப்பு (CL) கணக்கில் கொள்ளப்பட வேண்டும். ஆனால் ஒரு மணிநேரம் வரை தாமதமாக வருகை தர 2 நாள் மட்டுமே ஒரு மாதத்தில் அனுமதி தர வேண்டும், ஒரு மாதத்தில் இரண்டு முறைக்கு மேல் வந்தால் அதை அரை நாள் விடுப்பாக கணக்கில் கொள்ள வேண்டும்.

இதை விடுப்பாக கணக்கில் கொள்வது மட்டுமின்றி அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக னைத்து MDO களும் (அமைச்சகம்/துறை/அமைப்பு) வருகை அறிக்கைகளை தவறாமல் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தாமதமாக வருவதைப் போலவே முன்கூட்டியே புறப்படுவதையும் கண்காணிக்க வேண்டும். முன்கூட்டியே வெளியேறும் ஒவ்வொரு நாளுக்கும் அரை நாள் சாதாரண விடுப்பு (CL) கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more ; ‘மாணவர்களின் திசைகாட்டி..’ ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்..!!

Tags :
Central Government employeescentral govt
Advertisement
Next Article