முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாதம் 5 ஆயிரம் ஊக்கத்தொகை.. பிரதமரின் இன்டென்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம் இதோ..

The central government has introduced a vocational training program for youths who will get an incentive of Rs.5 thousand per month. Under this scheme unemployed youth can apply for vocational training.
05:12 PM Oct 09, 2024 IST | Mari Thangam
Advertisement

மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை கிடைக்கும் இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தொழில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Advertisement

வேலைக்கான பயிற்சி வழங்கும் விதமாகவும் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி வழங்க நாடு முழுவதும் 500 முன்னணி நிறுவனங்களை அரசு தேர்வு செய்துள்ளது. இந்த நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுவதற்காக இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஒரு ஆண்டிற்கு 60 ஆயிரம் கிடைக்கும்.

இதில் ரூ.4,500 மத்திய அரசும், ரூ.500 சம்பந்தப்பட்ட நிறுவனமும் வழங்கும். தகுதி உள்ள இளைஞர்கள், வரும் 12 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பதிவு செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட நிறுவனங்கள் பரிசீலனை செய்து நவம்பர் 27 ஆம் தேதிக்குள் தேர்வு பட்டியலை வெளியிடும். அதன்பிறகு பயிற்சிகள் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கும். சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 2024 - 2025 நிதி ஆண்டில் 1.25 லட்சம் பேருக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்பு வழங்கப்படும்.

தகுதிகள் என்ன?:

எப்படி விண்ணப்பிப்பது?  விருப்பம் உள்ளவர்கள் www.pminternship.mca.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான இந்த தொழில் பயிற்சி திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 கோடி பேருக்கு தொழில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழில் பயிற்சி அளிக்கும் திட்டத்தில், இந்தியாவில் 500 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

Read more ; 3 விஞ்ஞானிகளுக்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு..!! யார் அவர்கள்? கண்டுபிடிப்புகள் என்ன?

Tags :
apply for vocational trainingcentral govtinternship schemescheme
Advertisement
Next Article