For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மக்களே...! கோடை கால மின் வெட்டு...! கவலை வேண்டாம்... மத்திய அரசின் புது முயற்சி...!

11:02 AM Apr 14, 2024 IST | Vignesh
மக்களே     கோடை கால மின் வெட்டு     கவலை வேண்டாம்    மத்திய அரசின் புது முயற்சி
Advertisement

கோடை காலத்தில் இந்தியாவில் நிலவும் அதிகபட்ச மின் தேவையை சமாளிக்கும் வகையில், எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Advertisement

எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து அதிகபட்ச மின்சார உற்பத்தியை உறுதி செய்வதற்காக, மின்சார சட்டம், 2003 பிரிவு 11-ன் கீழ் அனைத்து எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கும் அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. எரிவாயு அடிப்படையிலான மின்னுற்பத்தி நிலையங்களில் (GBSs) பெரும் பகுதி தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது. முதன்மையாக வணிக நோக்கங்கள் காரணமாகவே இவை செயல்படாமல் உள்ளன.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கு மேற்கோள்ளப்பட்டதைப் போலவே பிரிவு 11-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது அதிக தேவை உள்ள காலத்தில் எரிவாயு அடிப்படையிலான உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரம் கிடைப்பதை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உத்தரவு 2024 மே 1 முதல் 2024 ஜூன் 30 வரை மின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கு அமலில் இருக்கும்.

இந்த ஏற்பாட்டின்படி, எரிவாயு அடிப்படையிலான மின்சாரம் எத்தனை நாட்களுக்கு தேவைப்படுகிறது என்பதை கிரிட்-இந்தியா முன்கூட்டியே எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களுக்கு தெரிவிக்கும். மின் பகிர்மான உரிமதாரர்களுடன் மின் கொள்முதல் ஒப்பந்தங்களை வைத்திருக்கும் எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்கள் முதலில் கொள்முதல் செய்வோருக்கு தங்கள் மின்சாரத்தை வழங்க வேண்டும். இந்த உத்தரவை செயல்படுத்த மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மின்சார தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இது பொருளாதார வளர்ச்சியால் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வெப்பமான வானிலை மற்றும் அதிக தேவை காலங்களில் மின்தேவை மேலும் அதிகரிக்கிறது. 2024ம் ஆண்டில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) கணித்துள்ளது. இப்பின்னணியில் பருவ காலத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்கும் என்பதை எதிர்நோக்கி பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement