முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கோதுமை மீதான இருப்பு... 30 நாள் தான் டைம்...! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு...!

The central government has decided to fix stock limits on wheat.
09:51 AM Jun 25, 2024 IST | Vignesh
Advertisement

ஒட்டுமொத்த உணவுப்பாதுகாப்பை நிர்வகிப்பதற்கும், சேமிப்பு மற்றும் நேர்மையற்ற ஊகங்களைத் தவிர்ப்பதற்கும், அனைத்து மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய தொடர் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துவோருக்கும் பொருந்தக் கூடிய கோதுமை மீதான இருப்பு வரம்புகளை நிர்ணயிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 2024 ஜூன் 24 முதல் 2025 மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்.

Advertisement

சில்லறை விற்பனையாளர்களுக்கு, ஒவ்வொரு சில்லறை விற்பனை நிலையத்திற்கும் 10 மெட்ரிக் டன், பெரிய தொடர் சில்லறை விற்பனையாளர்களுக்கு ஒவ்வொரு விற்பனை நிலையத்திற்கும் 10 மெட்ரிக் டன் மற்றும் அனைத்து டிப்போக்களுக்கும் சேர்த்து 3000 மெட்ரிக் டன், பதப்படுத்துவோருக்கு மாதாந்தர நிறுவப்பட்ட திறனில் 70% என்பதை 2024-25 நிதியாண்டின் மீதமுள்ள மாதங்களால் பெருக்கிய அளவு, மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இந்த இருப்பு வரம்பு பொருந்தும்.

இந்த நிறுவனங்கள் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் போர்ட்டலில் (https://evegoilsnic.in/wsp/login) இருப்பு நிலையை தெரிவிப்பதுடன் தொடர்ந்து தகவல்களைப் பதிவேற்ற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட இவற்றில் இருப்பு அதிகமாக இருந்தால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் அதனை நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
central govtrationwheat
Advertisement
Next Article