For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகிழ்ச்சி...! இந்த 3 புற்றுநோய் மருந்தின் சுங்க வரியை மொத்தமாக நீக்கிய மத்திய அரசு...!

The central government has completely removed customs duty on these 3 cancer drugs
06:15 AM Dec 07, 2024 IST | Vignesh
மகிழ்ச்சி     இந்த 3 புற்றுநோய் மருந்தின் சுங்க வரியை மொத்தமாக நீக்கிய மத்திய அரசு
Advertisement

டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை மத்திய அரசு முற்றிலுமாக நீக்கியுள்ளது.

Advertisement

மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறை டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான சுங்க வரியை முற்றிலுமாக நீக்கியுள்ளது. மேலும், 08.10.2024 தேதியிட்ட அறிவிக்கை எண் 05/2024 மூலம் இந்த புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிவிகிதங்கள் 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

மருந்துகள் (விலைக் கட்டுப்பாடு) ஆணை- 2013-ன் படி, இந்த மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) வரிகள், தீர்வைகள் உட்பட நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) ஒரு அலுவலக குறிப்பாணையை வெளியிட்டுள்ளது, அதில் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதாலும், சுங்க வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாலும், குறைக்கப்பட்ட வரிகள், தீர்வைகளின் பலன்களை நுகர்வோருக்கு வழங்கவும், விலை மாற்றம் குறித்த தகவல்களை அளிக்கும் படிவம் II/V-ஐ தாக்கல் செய்யவும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கூறிய அறிவிக்கைக்கு இணங்க, உற்பத்தியாளர்கள் இந்த மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை குறைத்து தகவல்களை தாக்கல் செய்தனர் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement