நாடே எதிர்பார்த்த அந்த நிகழ்வு...! ஜூலை 21-ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு...!
ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆலோசனை நடத்தவுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டம் 2024 ஜூலை 21 -ம் தேதி காலை 11 மணிக்கு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதானக் குழு அறையில் நடைபெறும்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் 22 ஜூலை 2024 அன்று தொடங்கவுள்ளது. இந்த அமர்வு 2024 ஆகஸ்ட் 12 அன்று நிறைவடையும். வருடாந்தர நிதிநிலை அறிக்கை மானியங்களுக்கான தேவை, நிதி மசோதா போன்றவற்றை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டின் அனைத்து ஆவணங்களும் யூனியன் பட்ஜெட் செல்பேசி செயலியில் கிடைக்கும்.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் டிஜிட்டல் வசதியின் எளிய வடிவத்தைப் பயன்படுத்தி அணுகலாம். இந்த செயலி இருமொழிகளில் (ஆங்கிலம் & இந்தி) உள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளங்களில் இது கிடைக்கும். இந்த செயலியை www.indiabudget.gov.in என்ற யூனியன் பட்ஜெட் வெப் தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம். 2024 ஜூலை 23 அன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சரின் பட்ஜெட் உரை நிறைவடைந்த பின் பட்ஜெட் ஆவணங்கள் செல்பேசியில் கிடைக்கும்.