For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ல் திருத்தம்...! மத்திய அரசு அறிவிப்பு

The central government has announced that amendments will be made to the foreign trade policy in 2023.
09:28 AM Jan 04, 2025 IST | Vignesh
வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை  2023 ல்  திருத்தம்     மத்திய அரசு அறிவிப்பு
Advertisement

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையை உருவாக்குவது அல்லது திருத்துவது தொடர்பாக இறக்குமதியாளர்கள் / ஏற்றுமதியாளர்கள் / தொழில்துறை வல்லுநர்கள் உட்பட சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகள், ஆலோசனைகள், பரிந்துரைகள் பெறப்படும். பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்து வெளிநாட்டு வர்த்தக கொள்கையை வகுத்து சட்ட முன்வடிவை உருவாக்கும் வகையில் பத்தி 1.07ஏ மற்றும் 1.07பி ஆகியவற்றைச் சேர்க்க வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Advertisement

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ன் உருவாக்கம் அல்லது திருத்தம் தொடர்பான கருத்துக்கள், பரிந்துரைகள், ஆலோசனைகள் மற்றும் அதனை ஏற்காமல் இருப்பதற்கான காரணங்களைத் தெரிவிப்பதற்கான வழிமுறையையும் இது வழங்குகிறது. வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, 2023-ல் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், முடிவெடுக்கும் செயல்முறையில் கலந்தாலோசனை நடத்துவதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினர் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவில் எளிதாக வர்த்தகம் புரிவதற்கான நோக்கத்தை வலுப்படுத்துவதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன.

Tags :
Advertisement