அலர்ட்!! வேகமாக பரவும் ஜிகா வைரஸ்..!! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
ஜிகா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு தேவையான முன்ன்ச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இருந்து முதல் ஜிகா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் கர்நாடகா போன்ற பல மாநிலங்கள் அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், மீணடும் ஜிகா வைரஸ் பரவலை தொடர்ந்து, பூச்சியியல் கண்காணிப்பை வலுப்படுத்தவும், குடியிருப்புப் பகுதிகள், பணியிடங்கள், பள்ளிகள், கட்டுமானத் தளங்கள், நிறுவனங்கள் மற்றும் சுகாதார வசதிகளில் வெக்டார் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் மாநில அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் புனேவில் இரண்டு கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 6 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டனர். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு தலை சிறியதாக இருக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுவரை ஏழு பேருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஜிகா வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஏ.டி.எஸ் கொசுவால் ஜிகா வைரஸ் பரவுவதால் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகள் அனைத்தையும் கண்காணித்து போதிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கொசு பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, மக்களிடையே பீதியைக் குறைக்க சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் முன்னெச்சரிக்கை IEC செய்திகள் மூலம் விழிப்புணர்வை ஊக்குவிக்கமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. அந்த வைரஸை கண்டறியவும் மற்றும் கட்டுப்படுத்தவும் மாநில அரசுகள் விழிப்புடன் இருக்கவும், தயாராகவும், அனைத்து மட்டத்திலும் முன்னெச்சரிக்கையாக இருப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் (IDSP) மற்றும் தேசிய நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டு மையம் (NCVBDC) ஆகியவற்றில் கண்டறியப்பட்டால் உடனடியாகத் தெரிவிக்குமாறு மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
ஜிகா வைரஸ் அறிகுறிகள்
- காய்ச்சல்-102°F (38.9°C) காய்ச்சல் இருக்கும்.
- தடிப்பு -உடலில் சிகப்பு நிற தடிப்புகள் ஏற்படும். அதோடு, முகம் மற்றும் உடலில் மற்ற பகுதிகளிலும் பரவும். அரிப்புடன் கூடிய தடிப்புகளாக இருக்கும்.
- விரல்கல், கை, கால் மூட்டுப் பகுதிகளில் வீக்கம், வலி ஏற்படும்.
- கண்களின் நிறம் சிகப்பு அல்லது பிங்க் நிறமாக மாறும்.
- வைரஸ் தொற்று ஏற்படுவதால் இருக்கும் தசை வலி உண்டாகும்.
- உடல்சோர்வு, வயிறு வலி, வாந்தி அல்லது கண்களில் வலி இருக்கும்.
Read more | நினைத்துக் கூட பார்க்கல.. ‘அம்பானி குடும்பத்திற்கு நன்றி’ – திருமண ஜோடியின் நெகிழ்ச்சி பதிவு!!