முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கைது பீதியால் தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கர்!!  7 தனிப்படைகள் அமைத்து தீவிரம் காட்டும் சிபிசிஐடி!!

The CBCID police have set up 7 special forces to nab former AIADMK minister M.R. Vijayabaskar, who is absconding in the Rs 100 crore land grab case.
11:26 AM Jun 28, 2024 IST | Mari Thangam
Advertisement

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டு கொலை மிரட்டல் விடுப்பதாக கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர்,  7 பிரிவுகளின் கீழ் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் முன்ஜாமீன் கோரி விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீஸார் தீவிரப்படுத்தினர். இதனிடையே முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார்.

அவரை பிடிப்பதற்காக சிபிசிஐடி தரப்பில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வடமாநிலத்திற்கு தப்பிச் சென்று இருக்கலாம் என்று கோணத்தில் சிபிசிஐடி போலீஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Read more ; TVK Vijay | ”தமிழ்நாட்டில் போதைப்பொருள் அதிகரிப்பு அச்சமாக உள்ளது”..!! த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு..!!

Tags :
cbcid policeformer AIADMK minister M.R. VijayabaskarM.R. Vijayabaskar
Advertisement
Next Article