முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பெரும் அதிர்ச்சி...! 'தங்கல்' பட நடிகை இறப்பிற்கான காரணம் வெளியானது...!

10:03 AM Feb 18, 2024 IST | 1newsnationuser2
Advertisement

தங்கல்' பட நடிகை இறப்பிற்கான காரணம் வெளியாகியுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஆமிர்கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான பாலிவுட் படம் ‘தங்கல்’. பெரும் வெற்றியைப் பெற்ற இப்படத்தில் ஆமிர்கானின் மகளாக பபிதா போகட் என்ற கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் சுஹானி பட்நாகர். இந்தப் படத்துக்குப் பிறகு, அவர் நடிப்பிலிருந்து விலகி படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

Advertisement

ஹரியாணாவின் ஃபரிதாபாத்தைச் சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. மேலும், இதற்காக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 19 வயதேயான அவரது இறப்பு குறித்த முழுமையான காரணம் நேற்று என்ன என்று தெரிவிக்கப்படவில்லை.

மறைந்த 'தங்கல்' பட நடிகை சுஹானி பட்நாகர் (19) Dermatomyositis என்ற அரிய வகை தசை வீக்க நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்ததாக அவரது தந்தை புனித் பட்நாகர் தெரிவித்துள்ளார். 2 மாதங்களுக்கு முன்பே 2 கைகளிலும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் எடுத்துக்கொண்ட மாத்திரைகளின் பக்க விளைவாக அவரின் நுரையீரலும் பாதிப்படைந்ததாக தந்தை தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article