இன்போசிஸ் மீது அபராதம் விதித்த கனடா அரசு! என்ன காரணம் தெரியுமா?
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்திற்குக் கனடா அரசு சுமார் 82 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. வெளிநாட்டில் வர்த்தகம் செய்யும் நாட்டின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனம், ரூ.5.89 லட்சம் கோடி சந்தை மதிப்புடன் இருக்கிறது. ஐடி ஜாம்பவான் நாராயணமூர்த்தியின் பல்வேறு திட்டங்களால் இந்நிறுவனம் அடிக்கடி தலைப்புச் செய்தியில் இடம்பெறும். இந்த நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா அரசு இந்திய ஐடி நிறுவனத்திற்கு 1.34 லட்சம் கனடா டாலர் அபராதம் விதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
கனடா அரசு, இன்ஃபோசிஸ் நிறுவனம் 2020 டிசம்பர் 31 ஆம் தேதி முடிவடைந்த நிதியாண்டில் ஊழியர் நல வரி அதாவது ஹெல்த் டாக்ஸ் குறைவாகச் செலுத்தியதற்காக அபராதம் விதித்துள்ளதாகக் கூறியுள்ளது. பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்குக் கடந்த வாரம் கனடா நிதித்துறையிடமிருந்து அபராதத்திற்கான உத்தரவு வந்துள்ளது. இந்த உத்தரவில், நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனம் தரப்பில் கூறுகையில், “கனடா அரசின் அபராதத்திற்குப் பதிலளித்த இன்ஃபோசிஸ் நிறுவனம், இந்த அபராதம் நிறுவனத்தின் நிதி நிலை, செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் எந்தவிதமான தாக்கமும் இல்லை என இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Read More ; நியூஸ் க்ளிக் இணையதள நிறுவனர் கைது சட்டவிரோதம்! – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு