70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்தவர் ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் பலாத்காரம் செய்த கொடூரம்..!! எங்கு தெரியுமா..?
70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த நபர், சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் 70 வயது மூதாட்டியை கடந்த 15ஆம் தேதி ஷைலேஷ் (35) என்ற நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மூதாட்டியை மிரட்டியுள்ளார். ஆனால், அந்த மூதாட்டி காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து புகார் அளித்தார்.
இதையடுத்து, சம்பவம் குறித்து உடனே வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மூதாட்டியை பலாத்காரம் செய்த ஷைலேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, சமீபத்தில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீனில் வெளியே வந்த அவர், மீண்டும் அதே மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படும் நிலையில், ஷைலேஷை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற நபர், ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அதே மூதாட்டியை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? உடனே அப்ளை பண்ணுங்க..!!