மனவளர்ச்சி குன்றிய தோழியை ஆண் நண்பர்களுக்கு விற்ற கொடூரம்.. சென்னையை நடுங்க வைத்த சந்தியா..!! - பகீர் பின்னணி
சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவியை கடந்த ஓராண்டாக அவரது தோழியின் உதவியுடன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் பகுதியை சேர்ந்த சந்தியா, சென்னை அண்ணா சாலையில் உள்ள மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடன் படிக்கும் மன வளர்ச்சி குன்றிய மாணவியுடன் நல்ல நட்பில் இருந்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி எப்போதும் ஆட்டோவில் தான் கல்லூரிக்கு வருவார். சந்தியா எதை சொன்னாலும் அவர் செய்வார். இதனால் சந்தியா சில நேரங்களில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு வீட்டில் இருந்தே உணவு எடுத்து வருவார். அந்த அளவுக்கு இருவரும் நல்ல தோழியாக இருந்துள்ளனர்.
சந்தியாவுக்கு நந்தனம் கல்லூரியை சேர்ந்த திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் அறிமுகமானார். அவருக்கு பாதிக்கப்பட்ட மாணவியை முதலில் சந்தியா அறிமுகம் செய்து வைத்துள்ளார். முதல் அறிமுகத்தன்றே சுரேஷ் விலை உயர்ந்த சாக்லேட் வாங்கி கொடுத்துள்ளார். அதன் பின் சுரேஷ் தனது ஊரை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் உடனே பாதிக்கப்பட்ட மாணவியை பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்று தவறாக நடந்துள்ளார்.
அதனை தொடர்ந்து சுரேஷ் மூலம் அவரது சக நண்பர்களான கல்லூரி மாணவர்கள் மாணவியை பல முறை பலாத்காரம் செய்துள்ளனர். அதற்கு சந்தியா முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். அதற்காக பாதிக்கப்பட்ட மாணவியை சந்தியா தனது செல்போன் எண் உதவியுடன் ‘ஸ்னாப்’ என்ற பாலியல் செயலியில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.
அதன் மூலம் திருப்பூரை சேர்ந்த கவி, கோயம்பேடு பகுதியை சேர்ந்த ரோஷன், கார்த்திக், அம்பத்தூரை சேர்நத் பாண்டி, திருத்தணியை சேர்ந்த மணி ஆகியோரிடம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் பெற்றுள்ளார். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 4 மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து சென்று சீரழித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு சந்தியா முழு பாலியல் புரோக்கராகவே செயல்பட்டு வந்ததுள்ளார்.
ஒரு கட்டத்தில் மாணவிக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு தான் அவரது தந்தைக்கு விவரம் தெரிந்து போலீசில் புகார் அளித்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்ட போலீசார், சந்தியா உட்பட வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்தனர். மனவளர்ச்சி குன்றிய மாணவியை கடந்த அவரது தோழியே பலாத்கார தொழிலில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more ; Fake Currency : அதிகமாக புழக்கத்தில் இருக்கும் போலி ரூ.500 நோட்டுகள்.. எப்படி கண்டறிவது..?