4 குழந்தைகளின் தாய்.. கள்ளக்காதலனுடன் உல்லாசம்..!! கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள்..!! அடுத்து என்ன ஆச்சு தெரியுமா?
காதல் ஒரு அழகான உணர்வு என்று சொல்லப்படுகிறது , ஆனால் இந்த காதல் ஒரு சட்டவிரோத உறவாக மாறினால், அது பல விமர்சனங்களுக்கு உள்ளாகிறது. ஜார்கண்ட் மாநிலம் சாஹிப்கஞ்ச் மாவட்டத்திலும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.
நான்கு குழந்தைகளின் தாயான பெண் கள்ளக்காதலனான இளைஞனுடன் உல்லாசமாக இருப்பதை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இருவரையும் வெளியே இழுத்து, அவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து சாலையில் ஊர்வலமாக சென்றனர். அதன் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காதல் ஜோடியின் வீடியோ வைரலானதை அடுத்து, சாஹிப்கஞ்ச் மாவட்ட போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். தற்போது குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள போலீசார் அவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கு மிர்சாசௌகி காவல் நிலையப் பகுதியில் உள்ள பச்சா பஞ்சாயத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தது. இங்கு வசிக்கும் 40 வயது திருமணமான பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர், அவரது கணவர் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கணவன் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த பெண், அடிக்கடி கள்ளக்காதலனுடன் உள்ளாசமாக இருந்து வந்துள்ளார். அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஒரு நாள் கள்ளக்காதலன் அவள் வீட்டிற்கு வந்தான். அப்போது படுக்கையறையில் இருவரையும் கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள், இருவரையும் வெளியே இழுத்தனர். முதலில் அவர்களை அடித்து, பின்னர் செருப்பு மாலை அணிவித்து ஊர் சுற்றி வந்தனர்.
இதனை சிலர் வீடியோ எடுத்து வைரலாக்கியுள்ளனர். இந்த காணொளி போலிஸாருக்கு கிடைத்ததும் விசாரணைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் 15 முதல் 20 பேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து, சாஹிப்கஞ்ச் மாவட்ட எஸ்பி அமித் குமார் சிங் கூறுகையில், மிர்சா சௌகி காவல் நிலையப் பகுதியில் ஒரு இளைஞனையும், திருமணமான பெண்ணையும் அவமானப்படுத்திய வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது, அதன் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து விசாரிக்க எஸ்டிபிஓ சாஹிப்கஞ்ச் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
Read more ; பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!