For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பிக்பாஸுக்கு போனது தான்’..!! ’குடிப்பழக்கத்தால் இப்படி இருக்கேன்’..!! நடிகர் சக்தி வேதனை..!!

Going to Bigg Boss was the first biggest mistake I made in my life.
08:18 AM Sep 19, 2024 IST | Chella
’என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பிக்பாஸுக்கு போனது தான்’     ’குடிப்பழக்கத்தால் இப்படி இருக்கேன்’     நடிகர் சக்தி வேதனை
Advertisement

பிரபல இயக்குனர் பி. வாசுவின் மகன் நடிகர் சக்தி, குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, தந்தையின் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சக்தி நடித்துள்ளார். 1991இல் சின்னதம்பி திரைப்படத்தில் இளைய வயது பிரபுவாக நடித்திருப்பார். குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்த முதல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 2017இல் தொட்டால் பூ மலரும் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து, சில திரைப்படங்களில் மட்டும் நடித்த சக்திக்கு, திடீரென வாய்ப்புகள் கிடைக்காமல் ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.

Advertisement

சில காலம் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்த சக்தி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் மக்களின் வெறுப்பையும், அவப்பெயரையும் சம்பாதித்து வெளியேறினார். இந்நிலையில் தான் செய்த மிகப்பெரிய தவறு குறித்து வேதனையோடு பேசியிருக்கிறார் சக்தி. இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் பிக் பாஸுக்கு சென்றது தான் என் வாழ்க்கையில் நான் செய்த முதல் மிகப்பெரிய தவறு. அந்த நிகழ்ச்சிக்கு ஆழம் தெரியாமல் கால் வைத்து விட்டேன்.

நான் கொஞ்சம் வசதியான வீட்டுப் பையனாகவே வளர்ந்ததால் எதிலும் நாம் ஃபெயிலானது கிடையாது. நன்றாக எம்பிஏ வரை படித்து 30 வருடம் சந்தோஷமான வாழ்க்கையை தான் வாழ்ந்து வந்தேன். ஆனால், கடந்த 8 ஆண்டுகள் அப்படியே என்னுடைய வாழ்க்கை புரட்டிப் போட்டு விட்டது. மனிதர்கள் 3 காரணங்களுக்காக குடிக்கிறார்கள். பண திமிறு, வேலைக்கு பளு, மன உளைச்சலுக்காக குடிக்கிறார்கள். பணத்திமரில் குடிப்பவன் மறுநாள் அதை மறந்து விடுவான். வேலை பளு காரணமாக குடிப்பவன் சந்தோஷமாக ஒரு நாள் குடித்துவிட்டு மறுநாள் வேலைக்கு செல்கிறான்.

ஆனால், மன உளைச்சலால் குடிப்பவனால் அதை நிறுத்துவது கடினம். அவன் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை நாசமாக்கிக்கொள்கிறான். நான் பண திமிரில் குடிக்கவில்லை. என்னுடைய சந்தர்ப்பம் சூழ்நிலை என்னுடைய பிரச்சனை என்னால் தாங்க முடியாத அளவுக்கு இருந்ததால் குடித்தேன். அது என்ன பிரச்சனை என்று கடவுளுக்கும், என் குடும்பத்தாருக்கும் தெரியும். பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு மோசமான அவப்பெயரை சம்பாதித்து கொடுத்தது.

பிக்பாஸ் முடிந்த பிறகு இரண்டு ஆண்டுகளாக நான் வீட்டிலேயே முடங்கி கிடந்தேன். அந்த சமயத்தில் ரஜினி சார் என்னை பற்றி அப்பாவிடம் விசாரித்து என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார். ரஜினி சார் சொன்னார்… எல்லோருடைய வாழ்க்கையிலும் இந்த மாதிரியான சறுக்கல்கள் நடந்திருக்கிறது. எல்லா நடிகர்களின் வாழ்க்கையிலும் இது நடந்திருக்கிறது. என் வாழ்க்கையிலும் இது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கு.

அது எல்லாம் கடந்துதான் நான் இந்த இடத்தில் வந்திருக்கேன். நீயும் திரும்ப வருவ உடனே வீட்டுக்கு வா என்று கூறினார். அவர் என்னை அழைத்துப் பேச வேண்டிய அவசியம் கூட கிடையாது. அவர் ஆறுதலாக பேசிய வார்த்தைகள் காயம் வடுக்களை ஆற்றியது. நான் அவரிடம்.. நான் கமல் சாரின் ரசிகர் ஆனால் உங்கள் வீட்டுப் பிள்ளை எனக் கூறினேன்” என்று எமோஷனலாக சக்தி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Read More : தமிழ்நாட்டில் 28 லட்சம் இணைப்புகளுக்கு மீட்டரே இல்லை..!! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மத்திய அரசு..!!

Tags :
Advertisement