தேர்தல் முடிவுக்குப் பின் அதிமுகவில் நடக்கும் மிகப்பெரிய மாற்றம்..!! தலைமை பதவியே மாறுது..!!
தேர்தல் முடிவுகளுக்கு பின்பு தங்கமணி, வேலுமணி தலைமையில் அதிமுக செயல்படும் என்று திமுகவினர் கூறுவது தொடர்பான கேள்விக்கு அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பதிலளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாடாளுமன்ற தேர்தல் வெற்றி அச்சாரமாக விளங்கும். தேர்தல் முடிவுகளுக்கு பின்பு தங்கமணி, வேலுமணி தலைமையில் அதிமுக செயல்படும் என்று திமுகவினர் கூறுவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “கிஞ்சிற்றும் இடமில்லை”. எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக, ஒப்பற்ற தலைமையாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தலைமையாக செயல்பட்டு வருகிறார்.
இரட்டை இலை, தலைமை கழகம், இரண்டரை கோடி தொண்டர்களுக்கு ஒரே தலைமையாக எடப்பாடி பழனிச்சாமி செயலாற்றி வருகிறார். அவர் மிகப்பெரிய ராஜ தந்திரியாக பணியாற்றி வருகிறார். அதிமுகவை காப்பாற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி தன்னை ஒப்படைத்துக் கொண்டுள்ளார். ஜெயலலிதாவைப் போல எடப்பாடி பழனிசாமி அதிமுகவை காக்க பணியாற்று வருகிறார். நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அதிமுக ஆகியவைகளில் எடப்பாடி பழனிசாமி தனக்குரிய பாணியில் செயலாற்றுகிறார்.
அதிமுக தலைமை மாற்றம் என்று பரவி வரும் செய்தி தவறானவை. நாடாளுமன்ற தேர்தலுக்காக அல்ல. அதிமுகவில் மாவட்டச் செயலாளர்கள் மாற்றுவது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். யாருக்கும் வேண்டுமானாலும் பதவி கொடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் தகுதி அறிந்து திறமை அறிந்து பதவி கொடுக்கக் கூடியவர் எடப்பாடி பழனிசாமி, மழைக்காலங்களில் பேரிடர் மீட்புத்துறையினர் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும் எந்த ஒரு அறிவிப்பையும் திமுக அரசு கொடுக்கவில்லை” என கூறினார்.
Read More : மனைவியை விவாகரத்து செய்யும் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா..? வெளியான ஷாக்கிங் காரணம்..!!