ரேஷன் பொருட்கள் விற்பனையில் வரப்போகும் புதிய நடைமுறை..!! பொதுமக்கள் செம ஹேப்பி..!!
தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் அரிசி விற்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக முக்கியமான சில தகவல்களை வெளியிட்டுள்ளது. இதை தடுப்பதற்காக முக்கியமான திட்டம் ஒன்றையும் கையில் எடுத்துள்ளது.
இதற்காக இனி ஜிபிஎஸ் உடன் கூடிய இ-வழித்தடம் அமைக்கப்படும் என்றும் இந்த வழித்தடத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் கண்காணிப்பு, ஜிபிஎஸ் மூலம் செயல்படுத்தப்படும் லாக் உள்ளிட்ட வசதிகள் கொண்டு வரப்பட உள்ளன. இந்நிலையில், சமீப நாட்களாக தமிழ்நாட்டில் அரிசி திருட்டு அதிகரித்துள்ளதாக புகார்கள் வைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா, தெலங்கானா, கேரளாவுக்கு அரிசி கடத்தும் பணிகள் அதிகம் நடந்து வருகின்றன. அங்கே அதிக விலைக்கு இந்த அரிசிகள் விற்கப்படுகிறது.
இதையெல்லாம் தடுக்க ரேஷன் கடைகளில் பாக்கெட் மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளில் தலா ஒரு ரேஷன் கடையை தேர்வு செய்து தொடங்க திட்டம் போடப்பட்டு உள்ளது. சுத்தத்தை உறுதி செய்யும் வகையிலும், கடைகளில் அரிசி அளவு குறைவதை தடுக்கும் வகையிலும் இனி பாக்கெட்டில் விற்கும் முறை அமலுக்கு வருகிறது. முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் ஒரு ரேஷன் கடையில் மட்டும் தற்போது ரேஷன் பொருட்கள் பாக்கெட் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
Read More : இனி வீடு வாங்கவே முடியாது போலயே..!! அதிரடியாக உயர்ந்த விலை..!! எவ்வளவு தெரியுமா..?