மாரடைப்புக்கு மிகப்பெரிய காரணம்!. இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்!.
Heart attacks: பாமாயிலின் பயன்பாடு கடுமையாக அதிகரித்து, ஆரோக்கியத்திற்கு கடும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த ஏன் தீங்கு விளைவிக்கிறது மற்றும் அதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்தியாவில் பாமாயில் இறக்குமதி மற்றும் பயன்பாடு மலிவானது ஆனால் இது மிக ஆபத்தானது.முக்கியமாக மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. கடுகு, கடலை, தேங்காய் எண்ணெய் போன்ற மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது, இதன் விலை மிகவும் குறைவு. குறைந்த விலை காரணமாக கடுகு மற்றும் கடலை எண்ணெய் போன்ற மற்ற எண்ணெய்களுடன் கலக்கப்படுகிறது.சந்தைகளில் பெரும்பாலான பேக் செய்யப்பட்ட எண்ணெய்களில் பாமாயில் கலப்படம் செய்யப்படுகிறது.
பாமாயிலின் தீமைகள்: இதில் அதிகளவில் டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன. அவை உடலில் ஒருபோதும் கரையாது. இந்த கொழுப்புகள் குவிந்து தமனிகளை அடைத்து மாரடைப்பு, மூளை ரத்தக்கசிவு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். பாமாயில் நல்ல கொழுப்பை குறைத்து கெட்ட கொழுப்பை அதிகரிக்கிறது. இது இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது.
பாமாயில் உட்கொள்வதால், உடல் எடை அதிகரிப்பதற்கும் வழி வகுக்கிறது.இதேபோல், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. சுத்திகரிக்கப்படும் எண்ணெய்களில் 6 முதல் 13 வரை ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இந்த ரசாயனங்கள் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற இயற்கையான பண்புகளை அகற்றி, எண்ணெய்யை ஆரோக்கியமற்றதாக ஆக்குகிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள் சுத்திகரிக்கப்பட்ட விளம்பரங்கள் மூலமாகவும், சஃபோலா அல்லது சூரியகாந்தி போன்ற எண்ணெய்களை பரிந்துரைக்கும்படி மருத்துவர்களிடம் நிறுவனங்கள் கூறுகின்றன. இருப்பினும், இயற்கை எண்ணெய்கள் கடுகு, கடலை எண்ணெய்கள் போன்றவை அரிதாகவே பரிந்துரைக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்தும் குடும்பங்கள் இதய அடைப்பு மற்றும் இதய நோய்களின் அதிக நிகழ்வுகளை புகாரளிக்கின்றன.
தூய எண்ணெய்களை பயன்படுத்தவும்: கடுகு, கடலை, தேங்காய், எள் எண்ணெய்கள் இயற்கையானவை, இவை குறைவாக பதப்படுத்தப்பட்டவை. இந்த எண்ணெய்களில் இயற்கையாகவே ஒட்டும் தன்மை, நறுமணம், புரதங்கள் ஊட்டச்சத்துகளில் இருந்து வருகிறது. அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். சந்தையில் பேக் செய்யப்பட்ட எண்ணெய்களை தவிர்க்கவும், உள்ளூர், சிறிய அளவிலான உற்பத்தியாளர்களிடம் இருந்து தூய எண்ணெய்களை பெற்று பயன்படுத்தலாம். இயற்கை எண்ணெயகள், உடலில் HDL (நல்லக்கொழுப்பு) அதிகரிக்க உதவுகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதயநோய்களை தடுக்கிறது.