"தலையில் இருக்கும் பொடுகு நீங்க…" இந்தத் தேங்காய் பால் வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க.!
உங்கள் தலையில் பொடுகு பாடாய்ப்படுத்துகிறதா.? வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த மருந்தை பயன்படுத்திப் பாருங்கள். இதன் பிறகு ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். சிலருக்கு காய்ந்த பொடுகு தொல்லை அதிகமாக இருக்கும். அதற்கு நாம் கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களைக் கொண்டு செய்யப்படும் மருந்தை பயன்படுத்தினால் சிறந்த தீர்வு கிடைக்கும்.
இதற்கு முதலில் தேங்காய் பால் ஒரு கிளாஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு வால்மிளகு எடுத்து அதனை நன்றாக பொடித்து கொள்ளவும். ஒரு சின்ன வெங்காயம் எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு நன்றாக கழுவிய பின்னர் அரைத்துக் கொள்ளவும். அதனை மிளகோடு நன்றாக கலந்து கொள்ளவும்.
மிளகு மற்றும் சின்ன வெங்காயம் இரண்டையும் ஒரு சுத்தமான காட்டன் துணியில் கட்டி அதனை தேங்காய்ப்பாலில் முக்கி எடுத்து தலையில் பொடுகு இருக்கும் இடத்திலும் முடியின் வேர் கால்களிலும் நன்றாக தேய்க்கவும். பொடுகு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு இதை தேய்க்கும் போது எரிச்சல் அதிகமாக இருக்கும். அதனால் பத்து முதல் 15 நிமிடங்கள் தேய்த்தால் போதும்.
தலை முழுவதும் நன்றாக தேய்த்த பின்னர் அதிக கெமிக்கல் இல்லாத ஷாம்பூ போட்டு குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர பொடுகு தொல்லை முற்றிலுமாக நீங்கும். இது முற்றிலும் இயற்கை பொருட்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டது என்பதால் எந்தவித பக்க விளைவுகளும் இல்லை. நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்.