முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

செவ்வாழை பழத்தில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்..!! இதை படித்தால் இனி தினமும் சாப்பிடுவீங்க..!!

If we want to increase the hemoglobin level in our body, we should eat a banana every day.
05:20 AM Jan 01, 2025 IST | Chella
Advertisement

பொதுவாகவே தினம் தோறும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் நமது உடலுக்கு அதிக அளவு நன்மை ஏற்படும். அதிலும், குறிப்பாக செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் ஏராளமான சத்துக்கள் நமக்கு கிடைக்கும். செவ்வாழை பழத்தில் பீட்டா கரோட்டின், விட்டமின் சி போன்றவைகள் அதிகளவு இருக்கிறது. பீட்டா கரோட்டின் என்பது நம் உடலுக்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.

Advertisement

நம் உடம்பிற்கு சத்து நிறைந்த உணவையே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். செவ்வாழையில் பொட்டாசியம் அதிக அளவு இருக்கிறது. அவை சிறுநீர் கற்கள் உருவாகாமல் இருக்க உதவும். மேலும், தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகளும் நீங்கும். வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறுகின்றது. எலும்புகள் நன்கு உறுதியாக இருக்க வேண்டும் என்றால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்லது.

செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் இதய நோயில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும், செவ்வாழை சாப்பிடுவதால், புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது. நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க வேண்டும் என்றால் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட வேண்டும். இதில் உள்ள வைட்டமின்கள் ரத்த அணுக்களை சீராக பராமரிக்க உதவுகிறது. செவ்வாழை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆற்றலை வழங்கி உடலை புத்துணர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் உள்ள சர்க்கரை அளவு உடலை சோர்வில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், நெஞ்சு எரிச்சலினால் அவதிப்பட்டு வருபவர்கள் தினம் ஒரு செவ்வாழை எடுத்துக் கொள்வது நல்லது.

Read More : ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவு..!! காலை உணவு ரொம்ப முக்கியம்..!! அதுவும் இப்படி சாப்பிடுங்க..!!

Tags :
இதய நோய்செவ்வாழைசெவ்வாழை பழம்நன்மைகள்விட்டமின் சி
Advertisement
Next Article