முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தது செல்லும்..!! சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

05:35 PM Nov 09, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஒவ்வொருநாளும் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

Advertisement

இதையடுத்து, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களை அரசு தடை செய்தது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், ரம்மி, போக்கர் விளையாட்டுக்களை தடை செய்த பிரிவை மட்டும் ரத்து செய்துள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு வயது வரம்பு, நேரத்தை அரசு நிர்ணயம் செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags :
ஆன்லைன் சூதாட்டம்ஆன்லைன் விளையாட்டுசென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Next Article