கடல்வாழ் நாடோடிகள்.. நாடு கிடையாது..!! பல நூற்றாண்டுகளாக கடலில் வாழ்ந்து வரும் மக்கள்..!!
கடல் என்றால் யாருக்கு தான் பிடிக்காது.. பிறந்த குழந்தைக்கு மொட்டையத்த பின் தலை கழுவுவதும், ஒருவர் இறந்தபின் திதி கொடுப்பதும் கடலிலேயே. மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கடலையே நம்பி உள்ளனர்.. ஆனால் இங்கு ஒரு இன மக்கள எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாமல், காலம் காலமாக கடலிலேயே வசித்து வருகின்றனர். உலகத்தின் ஒரு பகுதியாக கடலை பாவிக்கும் நமக்கு, உலகமே கடலாக இருக்கும் பஜாவ் மக்களை கண்டால் சற்று ஆச்சரியமாக தான் இருக்கும்
உலக மக்களால் “SEA NOMADS” என அழைக்கப்படும் பஜாவ் மக்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், இந்தோனேசிய கடற்பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள். இவர்களுக்கென்று தனியாக நாடு இல்லை, வீடு இல்லை, குடியுரிமை இல்லை. பிறப்பு முதல் இறப்பு வரை கடல் பகுதிகளிலேயே கழிக்கும் இவர்களுக்கு தொழில் என்று பார்த்தால், கடல் வாழ் உயிரினங்களை வேட்டையாடி, அதனை துறைமுகங்களிலும், மீன் பிடிப்பவர்களிடம் விற்று பிழைப்பு நடத்துவதில் மட்டுமே உள்ளது.
அவர்களது கலாச்சாரத்தில் பாரம்பரிய இசை, நடனம், கதை சொல்வது, பரம்பரை பரம்பரையாக கற்றுக்கொண்ட வித்தையை வைத்து வித்தியாசமான முறைகளால் கடல் வாழ் உயிரினங்களை பிடிப்பது என குறிப்பிட்ட சிலவை மட்டுமே உள்ளது. பஜாவ் மக்களின் பேச்சு மொழி, அவர்கள் வாழும் நாட்டிற்கு ஏற்றார் போல் சமா- பஜாவ், மலாயோ-போலிநேசியன் என சிறிது மாறுப்படும். பஜாவ் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று சுத்தமான குடிநீர் இல்லாததே. கடற் பகுதிகளில் வாழும் இம்மக்கள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் மினரல் வாட்டர் கேட்டு வாங்கி பருகி வருகின்றனர்.
பஜாவ் மக்கள் அரேபிய வணிகர்கள், பெனின்சுலா மற்றும் இந்திய வணிகர்களிடமிருந்து கலாச்சரத்தை பகிர்ந்துகொண்டவர்கள். மாறிவரும் கலாச்சாரங்கள், காலநிலை மாற்றம், கலங்கப்படும் கடற்பகுதிகள் மற்றும் நவீன உலகத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பஜாவ் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நில பரப்புகளில் வாழ துவங்கியுள்ளனர்.
Read more ; ஷாக்!. வயது ஏற ஏற மனிதர்களின் உயரம் குறைய ஆரம்பிக்கிறதா?. அறிவியல் என்ன சொல்கிறது?