முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நீயெல்லாம் ஒரு ஆளாடா.. அதிமுக இளைஞரணி நிர்வாகியை மிரட்டும் செல்லூர் ராஜூ..! இணையத்தில் ஆடியோ வைரல்...!

The audio of Sellur Raju threatening AIADMK youth executive has gone viral and created a sensation.
10:50 AM Jul 14, 2024 IST | Vignesh
Advertisement

நீயெல்லாம் ஒரு ஆளாடா… தொலைச்சுப்புடுவேன்…’ என்று எடப்பாடியிடம் புகார் அளித்த அதிமுக இளைஞரணி நிர்வாகியை, செல்லூர் ராஜூ மிரட்டிய ஆடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில்; திமுக கூட்டணி கட்சி சார்பில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சு.வெங்கடேசன், பாஜக சார்பில் ராம ஸ்ரீனிவாசன், அதிமுக சார்பில் மருத்துவர் சரவணன் வேட்பாளர்களாக களமிறங்கினர். சு.வெங்கடேசன் தேர்தலில் வெற்றி பெற்றார். பாஜகவிற்கு இரண்டாம் இடம் கிடைத்தது, அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு எதிராக செல்லூர் ராஜூ செயல்பட்டு, மூன்றாம் இடத்திற்கு அதிமுக சென்று விட்டதாக, மதுரை வந்த எடப்பாடி பழனிசாமியிடம், அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகி மற்றும் ராஜூவின் முன்னாள் உதவியாளர் ராமசுப்பிரமணியன் புகார் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. தற்போது இருவரும் பேசிக்கொள்ளும் ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு அந்த ஆடியோவில் தனது முன்னாள் உதவியாளரிடம்; ஒரு இடத்துல விசுவாசமா இருந்திருக்கியாடா? உடனே உதவியாளர், உங்ககிட்டே யாரு வேலை கேட்டா என கேள்வி எழுப்ப, அதற்கு செல்லூர் ராஜு நீதானே கேட்ட. தொலைச்சிப்புடுவேன். திருப்பரங்குன்றத்துலயே அங்க வேலை பார்த்துக்க வேண்டியதுதானே என்றார் . இதற்கு ராமசுப்பிரமணியன் முதல்லில் கூட இருந்த போது தெரியாதா..? என கேள்வி எழுப்ப உடனே செல்லூர் ராஜூ தொலைச்சிப்புடுவேன் பார்த்துக்கோ.. என்ன புடுங்குற.. கட்சிக்காரனுக்கு தெரியும் நான் வேலை பார்த்தேன், பார்க்காதது என பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
ADMKEdappadi PalanisamimaduraiSellur RajuViral Audio
Advertisement
Next Article